[கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி]

 Jpeg

காட்சி – 2

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     குருவிக் கூடு

நிலைமை  :     (சிட்டுக்கள் இரண்டும் மெட்டுரையாடல்)

ஆண்   :  என்ன பேடே! சிரிப்பென்ன?

எனக்கும் சொல்லேன்! சிரிக்கின்றேன்!

பெண் :   என்னவோ! வாழ்வை நினைத்திட்டேன்!

இனிமையில் என்னையே மறந்திட்டேன்!

வண்ண எண்ணங்கள் விரிந்ததனால்

என்னையே மறந்து சிரித்திட்டேன்!

 

ஆண் :   அதுவா! உண்மை! உண்மைதான்!

இதயம் குளிர்ந்த சிரிப்புத்தான்!

இனிய வாழ்வு வாழந்துவிட

நனிய கூட்டைச் சமைத்திட்டோம்!

என்ன பேடே! என்பேடே!

இனிதான் நமக்கு என்ன குறை?

வாழ்வே இதுதான் சிறுபேடே!

தாழ்வாய்ச் சொன்னேன்! அறிந்து விடு!

 

பெண் :   அறிய என்ன இதில் உண்டு?

அரிய உழைப்பால் அமைத்திட்டோம்!

நெஞ்ச உரத்தால் கட்டிட்டோம்

கொஞ்ச உழைப்பா! பலியிட்டோம்

(சொல்லிய பேடோ சொல் நிறுத்தி   

                   மெல்லவே முகத்தால் குரல் காட்டி)

கதவில் யாரோ! டொக்! டொக்!

பதமாய்த் தட்டுதல் கேட்டாயா?

யாராய் இருக்கும்? குடில் முன்னே

கூராய்ப் பார்த்தே நிற்கின்றார்?

 

ஆண் :   யாராய் இருந்தால் நமக்கென்ன?

பார்க்கக் கவிஞரை வந்திருப்பார்!

 

பெண் :   பேச்சைக் கொஞ்சம் கவனிப்போம்!

ஆச்சே கேட்டுப் பல நாட்கள்!

 

ஆண் :   வேலையைப் பாரு! வம்பெதற்கு?

நாளைய வாழ்வை நாம் நினைப்போம்!

 

பெண் :   எப்பவுமே! நீ! இப்படித்தான்!

தப்பது காண்பதே உன் வழக்கம்;

 

(காட்சி முடிவு)

(தொடரும்)

 two-sparrows01