பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! :
காட்சி -4
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : குருவிக் கூடு
நிலைமை : (நாடகம் காண வந்தோரைப்
பேடது கண்டு திகைக்கின்றது)
பெண் : இன்றென்ன! வருவோர்! போவோருமாக
நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்?
ஆண் : பொங்கல் திருநாள் நாடகமன்றோ?
எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!
“தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?
அமிழ்தாய் இங்கு உரைத்தார்! சிலர்தான்
பெண் : தாவியே வாசலில் இருக்கின்ற
பூ அரசமரத்திற்கே
சென்றே கிளையில் நாம் அமர்ந்து!
நன்றே பார்ப்போம் நாடகத்தை!
ஆண் : பொறுமையாய்க் கொஞ்சம் இருந்தாலென்ன?
சிறிதுநேரம் தாழ்த்தியே செல்வோம்!
பெண் : கவிஞரும் அவரும் போய் விட்டாரே
கவனித்தாயா? இல்லையா? சொல் நீ
ஆண் : சேச்சே ஒன்று பிடித்தால்! உடனே நீ
மூச்சுபோல தொடர்ந்து பிடிப்பாய்!
பெண் :ஊதலும் வேகமாய் ஊதுது! பார்! நீயே
கசமுசவென்ற பேச்சையும் கேள்! நீயே
விளக்கும் அணைந்ததே! தெரியலையா?
விளக்கமாய் இன்னும் சொல்லணுமா?
(காட்சி முடிவு)
(பாடும்)
Leave a Reply