thalaippu_paarvaiillaar_chellaiya

பார்வை இல்லார் வாழப் பாடுவோமா?

உருவில் அழகு குறையுமானால்,

ஒப்பனை செய்ய ஓடுகிறோம்!

தெருவில் அழுக்கு நிறையுமானால்,

தென்படுவோரைச் சாடுகிறோம்!

எருவில்லாத பயிரைப் பார்த்து,

ஏங்கலும் கொண்டு வாடுகிறோம்.

கருவிலிருந்தே பார்வை இல்லார்,

களிப்புடன் வாழப் பாடுவோமா?

  • கெருசோம் செல்லையா