தலைப்பு-புரட்சிப்பொங்கல் : thalaippu_puratchipongal

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

கசப்பான இழப்புகள் நடக்கும்
களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள்
இனிப்பான பொங்கல் பொங்கித்
தமிழரின் பண்பாட்டை
தரணி எங்கும் பரப்பினர்

தமிழர்கள் நாம்
தமிழே மூச்சு
தமிழ் மொழியே பேச்சென
தலைநிமிர்ந்து வாழ்வோம்

அடிமை நிலையை எதிர்ப்போம்
அடுத்தவன் காலில்
அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம்
அறநெறி கற்க மறவோம்
அம்மை அப்பரைத் தொழுவோம்

எமக்கென ஓர் இடம் பிடிப்போம்
எம்மவரை அங்கு ஆளவைப்போம்
எளிமையை என்றும் மறவோம்
எதற்கும் துணிந்து நிற்போம்

பொங்கு தமிழாய் எழுவோம்
புவியெங்கும் எம் பெயர் பதிப்போம்
பொங்கலோ இது பொங்கல்!
புரட்சி மிக்க பொங்கல்!

சங்கத்தமிழன் பொங்கல்!
இது சாதித்த தமிழன் பொங்கல்!
இரண்டாயிரத்துப் பதினாறு பொங்கல்!
எங்கள் துயர் துடைக்கும் பொங்கல்!

– சங்கிலியன் பாண்டியன்