genocide136

விடிவு முடிவான காலத்திலே

அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள்

முதுமையான பசுமை நினைவைச்

சுமக்கும் வாய்க்கால்

இப்போது பயங்கரமாய்

இரத்தம் கலந்த சிவப்பாய்

மனிதரை அல்ல

சடலங்களைச் சுமக்கிறது

 genocide111genocide124

கந்தகப்புகையை

சுவாசித்து வாழ்ந்த மக்கள்

கையில்லாமலும் காலில்லாமலும்

சிறைப்பிடிக்கப்பட்டார்கள்

genocide135

தரவு : (இ)லியோ

நன்றி : leomalar.blogspot.com

http://www.yarl.com/forum3/?showtopic=103383