வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்
மதுவிலக்கு மாணவப் போராளிகள்
நந்தினி, சோதிமணி…..
தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே
தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு
மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ
மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு
மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று
விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது
தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா
திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை
சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா
சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு
மானமுள்ள தமிழனென்று உலகிற்குக் காட்டு – நீ
மறத்தமிழ் இனமென்று இன்றே நாட்டு
– புதுவைத் தமிழ்நெஞ்சன்
தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே
தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு
மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ
மக்களுக்குச்ச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு

Leave a Reply