பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1 தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
மோனைப்புலவன் – அல்லி
அகவல்
அல்லி : | ஏனையா | புலவரே | என்ன | வியப்பிது |
கன்னிநான் | வருதலைக் | கண்ணாற் | கண்டும் | |
புன்னை | நிழலில் | பொருள்தே | டுகின்றாய் | |
தின்னுங் | கருவாடு | திகட்டுமோ | பூனைக்கு | |
கன்னியென் | பார்வை | கசந்ததோ | நினக்கு | |
மோனை : | அய்யகோ | அத்தை | மகளே | அல்லியே |
சத்த | மிட்டுநீ | சகலமும் | பேசேல் | |
நாளைநம் | மன்னன் | நவிலவுங் | கூடும் | |
காளையர் | யாரும் | கன்னிப் | பெண்ணும் | |
காதல் | செய்தால் | கசையடி | உண்டென | |
அல்லி : | அப்படி | ஆணை | அரசனே | யிட்டால் |
தப்பே | துமில்லை | சலிப்பே | யின்றி | |
மோனைக் | கவிதை | முழங்கித் | திரியும் | |
கேலிச் | செயலைக் | கீழெனத் | தள்ளி | |
எந்நாள் | நீயெனை | மணப்பாய் | அறியேன் | |
மோனை : | அத்தை | மகளே | என்னா | ருயிரே |
இக்கணம் | சரியென | ஒப்புவை | யாயின் | |
அக்கணங் | கொணர்வேன் | அழகொளிர் | ஆரம் | |
ஆற்றில் | குளிக்கும் | அழகிய | பெண்களை | |
விரச | நோக்கில் | சரச | நினைப்பில் | |
அரச | மரத்தின் | அடியில் | அமர்ந்தே | |
நோக்கும் | தொப்பையார் | அடிவயி | றெரிய | |
தொடங்கிட | வாழ்வு | துடிகின் | றேன்நான் | |
அல்லி : | தமிழ்க்குப் | பேரிடர் | தாவி | வருதலை |
இமைப்போ | துமெண்ணா | மல்நீ | யிங்கே | |
காதல் | மொழியில் | களித்திருக் | கின்றாய் | |
உன்போல் | ஆண்கள் | மண்மேல் | உலாவல் | |
புல்லும் | நெல்லொடு | பொலிதல் | போன்றதே | |
மோனை : | மாமன் | மகனை | மங்கைநீ | மணந்தால் |
மாத்தமிழ் | மாயுமோ | அய்யகோ | ஈதென் | |
வியப்புறு | விளக்கம் | விளம்புக | நீயே | |
அல்லி : | சங்கத் | தமிழை | மங்கைக் | குரைத்த |
சிங்கக் | கவிஞன் | செத்தால் | தமிழ்தான் | |
பங்க | முறுதல் | பாவிநீ | மறந்தாய் | |
மோனை : | பொடியன் | உதாரன் | போய்த்தீர்ந் | தால்தமிழ் |
பொடியா | குமெனப் | புலம்புவ | தென்ன | |
விரிவாய் | நீதான் | விளம்பினா | லென்ன |
அறுசீர் விருத்தம்
அல்லி : தமிழைப் பயிற்றும் புலவன்தான்
தமிழை வளர்க்கும் நீராவான்
உமியைக் குத்தி உணவாக்க
உலையி லாரும் இடுவாரோ
இமைக்குள் இருக்கும் பாவைபோல்
எமது மொழியைக் காப்பாற்றித்
தமிழைப் பயிற்றும் புலவோரைத்
தலையா யுயர்த்தல் கடனன்றோ
விழியைக் குத்திப் புண்ணாக்கி
விருந்து படைக்குஞ் செயலாக
மொழியை வாழ்த்திச் சிலபேரும்
முனக லின்றி மறைவாகப்
பழியைச் சூழ்வார் புலவோர்க்குப்
பழிப்பா மன்றோ அவர்செயல்தான்
அழிவு புலவர்க் காமாயின்
அழியுந் தமிழ்தான் அறிவாயே
பீடு நிறைந்த உணர்வைத்தான்
பிறந்த மொழியே யல்லாமல்
ஏடு தூக்கிக் கற்கின்ற
எந்த மொழியுந் தாராது
நாடு வாழ நலம்பெருக
நலஞ்சேர் தமிழும் வேண்டாமோ
கேடு செய்தால் புலவோர்க்குக்
கெடுவது தமிழே உணர்வாயே
அகவல்
மோனை : | நன்று | சொன்னாய் | நங்காய் | நாளை |
அவையிலே | அரசன் | அருந்தமிழ்க் | கவிஞன் | |
கேடுற | ஆணை | கிளத்துவ | னாயின் | |
அறம்பா | டிநானே | அதனைத் | தடுப்பேன் | |
அல்லி : | மோனைப் | புலவனே | மோசஞ் | செய்யேல் |
அசட்டுப் | பிசட்டென் | றவையில் | உளறின் | |
வசமாய்ச் | சிக்கி | வதைபட் | டழிவாய் | |
மோனை : | அடியேன் | ஆற்றலுக் | கணைபோ | டுகிறாய் |
பிணைந்தோர் | தம்மைப் | பிரியா | துகாத்திட | |
வகுத்த | திட்டம் | வகையா | யெனக்கு | |
பகையா | யெண்ணா | துரைப்பாய் | பாவாய் | |
அல்லி : | நடந்த | நடப்பை | நாட்டார் | உணர |
எங்கள் | தலைவி | இயம்புவா | ளவையில் | |
பொங்குந் | தமிழ்க்கவி | தன்னிலை | உரைப்பார் | |
பழகுந் | தமிழ்க்கு | நேராது | பழியென | |
நானினைக் | கின்றேன் | ஆனா | லுமொன்றை | |
உனக்குநா | னுரைப்பேன் | உள்ளங் | கொள்க | |
எங்கள் | தலைவிக் | கேது | மாமெனின் | |
தங்கா | தென்னுயிர் | சொன்னேன் | உறுதி | |
மோனை : | பதறாச் | செயல்தான் | சிதறா | தென்றே |
பகர்ந்த | மொழியைப் | பாவாய் | மறவாய் | |
நற்றமிழ்க் | கவிஞன் | நல்லுயிர் | காத்துக் | |
கொற்றவன் | மகளொடு | கூட்டுவொம் | நன்மணம் | |
சித்தங் | கலங்கேல் | செந்தமிழ் | பழிப்புற | |
வாழ்தலே | சாதல் | சொன்னேன் | வஞ்சினம் |
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply