(காலத்தின் குறள் பெரியார் : 10 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி

காலத்தின் குறள் பெரியார்

அதிகாரம் 11.ஆட்சி

1.அறியாமைத் தீவளர்த்து ஆதிக்கம் புரிவார்

  புரியாமல் வாழ்வாய்நீ வீண்.

2.மக்களைப் பேணாமல் மாக்களைப் பேணுதல்

  மக்களாட்சி என்னல் இழிவு.

3.வெள்ளையர் கொள்ளையர் செய்த உடன்படிக்கை

  மக்களாட்சி மாற்றுப் பெயர்.

4.உணவுஇடம் ஓர்ஆடை இல்லார் இருப்பை

  உணராத ஆட்சி எதற்கு.   

5.கெடுதலைச் செய்யும் அரசின்கீழ் வாழ்ந்தால்

  விடுதலை மாந்தரா நாம்.     

 6.இப்பொறுப்பால் தான்வாழ எண்ணான் எனத்தெளிந்து

  அப்பொறுப்பில் நீயமர்த்து வாய்.

7.இடித்துரைப்பார் சொல்வதை ஏற்றிடும் ஆட்சி

  கெடுத்துரைக்க வல்லவன் யார்.                                 

  8.தலையாட்டும் பொம்மையாய் வாழும் அமைச்சர்

  நிலைமாற்றும் நின்மாற்றம் தான்.   

9.சூழ்ச்சி புரிவோர் வீழ்ச்சியுறச் செய்தபின்

  ஆட்சி அமைப்பவர் யாம்.

10.திராவிடம் என்பது சூத்திரன் பார்ப்பான்

   இராவிடம் என்பது தான்.

(தொடரும்)

..வேலரசு () தமிழரசன்:

காலத்தின் குறள் பெரியார்