காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்
(காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)
காலத்தின் குறள் பெரியார்
அதிகாரம் 5. பகுத்தறிவு.
1.அறிவுடன் ஆராய்ச்சி யாண்டும் துணையாய்
நெறிகாத்து நிற்கும் நிலைத்து.
2.ஆராய்ச்சி ஆளும் உலகத்தை ஆய்வினைப்
பேராட்சி செய்வ தறிவு.
3.மானம் அறிவாம் இரண்டையும் பேணுவோம்
நாம்நம் பகுத்துணர் வால்.
4.கொடுப்பாரும் கொள்ளாரும் இல்லா உலகைப்
படைக்கும் பகுத்தறிவென் பார்.
5.முன்னோர் உரைத்திட்டார் மூத்தோர் வழிமொழிந்தார்
என்றேபின் செல்லா திரு.
6.எப்பொருள் எத்தன்மை யார்சொன்னார் கேள்வி
எழுப்புநீ வள்ளுவன் சொல்.
7.மூடத் தனந்தான் முகங்கோணி மூக்கொழுக
ஓடச்செய் அஃதே அறிவு.
8.அறிவு விளக்கே அறியா இருளை
அறிவால் அழகாய்த் துலக்கு.
9.உரைப்பார் உரைப்ப(து) உணர்ந்தே தெளிய
உரைகல்லாம் உன்றன் அறிவு.
10.உன்னறிவு போதா தெனில்நம் பெரியாரின்
நுண்ணறிவே தூண்டுகோல் தான்.
(தொடரும்)
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்:
காலத்தின் குறள் பெரியார்
Leave a Reply