தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!
ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்!
ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!
அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்!
அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்!
தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்!
மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!
அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய
அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்!
தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத்
தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!
அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண்
அடிமை நீங்கவே படையில் பெண்களை இணைத்தான்!
விலையே போகாத் தமிழர் தலைவனாய் நிமிர்ந்தான் – பெரும்
வெற்றி படைக்கவே எங்கோ புதிராய்ப் புகுந்தான்!
https://youtu.be/5KvLkrPXud0
நிலவன் – வாகைத் தொ.கா.(NILAVAN-VAAKAITV VTV)
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply