(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 –‌ தொடர்ச்சி)

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8

பாலுக்குள்  நெய்பதுங்கி   உள்ள   தன்மை

பார்வைக்குத்   தெரியவில்லை   என்ப   தாலே

பாலுக்குள்   உள்ளநெய்யும்   பொய்யாய்ப்   போமோ

பாட்டிற்குள்  அறிவியலின்   கருத்தை  யெல்லாம்

மேலுக்குச்    சொல்லவில்லை   என்ப   தாலே

மேடையிலே   இல்லையென்று   முழங்க   லாமா

காலங்கள்   வினைத்தொகையில்   உள்ள   போலே

கனித்தமிழில்   அறிவியலும்   உள்ள  துண்மை !

 

பொறியிலின்   நுணுக்கத்தைப்   பாட்டிற்   குள்ளே

போற்றியதைத்   தெரியாமல்   மறைத்து   வைத்தோம்

குறியீட்டில்    மருத்துவத்தைச்   சித்த   ரெல்லாம்

குறித்தளிக்கப்   புதையலெனப்   புதைத்து   வைத்தோம்

அறிவியலை   உவமைகளாய்   அடுக்கி   வைக்க

அழகுநயம்   எனச்சொல்லி   மூடி   வைத்தோம்

தெரிவிக்க   மறுத்ததாலே   கையில்   வைத்தும்

தெரியாமல்   மூடரெனத்    தாழு   கின்றோம் !

 

(தொடரும்)

பாவலர் கருமலைத்தமிழாழன்

9443458550

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்

சித்திரைத்திருவிழா  கவியரங்கம்

நாள்:  சித்திரை 02, 2048 / 15 -4 – 2017

தலைமை :  முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

தலைப்பு :  பல்துறையில் பசுந்தமிழ்