கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப்
‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது
சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்
பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர்.
இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார்.
கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும், பரிசுத்தொகை உரூ.50 ஆயிரத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விழாப்பேருரையாற்றினார்.
இவ்விழாவில், திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழக இணைவேந்தர் இரவி பச்சமுத்து, தலைவர் சி.நிரஞ்சன், பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, துணைவேந்தர் செ.முத்தமிழ்ச்செல்வன், பேராசிரியர்கள் பா.செய்கணேசு, தி.ஞா.நித்யா, வே.பிரபாகரன், விருதாளரின் கணவரும் புகழ்மிகு குறும்பாக் கவிஞருமான மு.முருகேசு முதலானோர் பங்கேற்றனர்.
Leave a Reply