vaiko06

செயலலிதா ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கப்  பிரதமர் ஆகப்போகிறாரா: வைகோ பேச்சு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய சனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்துவை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை  பரப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நீதி கிடைக்கும்.

முல்லைப் பெரியாறு, காவிரிச்சிக்கல்  இலங்கையுடனான மீனவர்  சிக்கல் எனப் பல்வேறு சிக்கல்களில் தமிழகம் நீதி பெற நாம் 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டுப் போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ, அங்கே மட்டும் உடன்படுவோம்.

செயலலிதா  தலமையாளர் -பிரதமர்- கனவில் திளைக்கிறார். எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை. ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கு பிரதமர் ஆகப்போகிறாரா. பேச்சுவார்த்தை என்கிற பெயரில்  பொதுவுடைமைக் கட்சியினரை நாள்தோறும் இழுத்தடித்துக் கடைசியில் மரியாதை இல்லாது வெளியேற்றி இருக்கிறார். இந்தப் பட்டறிவு எங்களுக்கும் உண்டு என்ற வேதனையில் இதைச் சொல்கிறேன் என்றார்.

t.r.pachamuthu01