தமிழர்களுக்கு மட்டும் வேண்டுகோள்! – ஆ.சு.மணியன், தமிழர் சங்கம்
தமிழர் சங்கம்
ஆ.சு.மணியன், திருத்துறைப்பூண்டி
அன்பு வேண்டுகோள்
உலகத்தமிழர்களே!
உலகத்தமிழர்களை (இணையம் வழியாக) ஒன்றிணைக்க முனைந்துள்ளோம்.
எனவே தமிழர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்!
தமிழர்கள் அல்லாதவர்களைச் சேர்க்க மாட்டோம் எனத் தமிழர் சங்கத்திலிருந்து அறிவிக்கிறோம்.
தமிழர்கள் தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல்முகவரி, பேசி எண்கள், தந்தை மொழி, தாய்மொழி குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குடும்பத்தில் காதல் திருமணம் செய்தவர் இருந்தால் அவர் குறித்த விவரம், மேலும் தமிழ் மக்கள்வளர்ச்சியடைய சிறந்தவழி முதலியவற்றைப் பகிர்பேசி வழி, மின்னஞ்சல்வழி, யனுப்பிட வேண்டுகிறோம்
தமிழர்கள் எழுதும்போது தமிழ் எழுத்தைமட்டும் பயன்படுத்த வேண்டுகிறோம்.
தமிழர்களிடம் குலம்/சாதிஇல்லை. அதுபோல் மதமும் இல்லை.
உலகத்தமிழர்களின் மறை நூல் உலகப்பொதுமறையான திருக்குறளே.
குழந்தைகளுக்குப் பெயர்வைக்கும்போது தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்
காதல் திருமணம் செய்ய வையுங்கள்!
காதல் திருமணம் செய்தவர்க்குப் பொருளாதார உதவி செய்யுங்கள்! மேலும் குடியிருக்க வீடு கொடுங்கள் மேலும் வணிகம்செய்ய வழிகாட்டி உதவுங்கள்.
திருமண நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்தவரைமதித்து முன்னிலைப் படுத்துங்கள்
அரசாங்க வேலைக்கு ஆள் எடுக்கும் போது முன்னுரிமை அடிப்படையில் காதல்திருமணம் செய்தவர்களில் ஒருவருக்கு வேலை /ஒருவருக்குக் க டன் வழங்கவேண்டும்
ஒருத்திக்கு ஒருவன் என்ற தமிழ் பண்பாட்டை ப் பின்பற்றவேண்டுகிறோம்
தமிழ் எழுதும்போது சமற்கிருதம் ஆங்கில எழுத்துகளைக் கலக்காமல் எழுதுங்கள்.
ஒருதமிழன் இன்னொரு தமிழனைக்கண்டால், “வணக்கம்! வாழ்க தமிழ்!” எனச்சொல்லுங்கள்.
தமிழர் எவரும் /பிறர் பசியுடனிருப்பதைக் கண்டால் சாப்பிடச்சொல்லுங்கள் அல்லது பகிர்ந்துஉண்ணுங்கள்.
வெளியூரிலிருந்து வந்துள்ள தமிழருக்குத் தங்க இடம்கொடுங்கள்.
பொருளாதார நெருக்கடியிலிருந்தால சிறுபொருளுதவிக்கும் வேலைக்கும் ஆவன செய்யுங்கள்
மாதத்தின் முதல்நாள் தமிழர்கள் அந்ததந்த ஊரில் / நகரில் ஒன்று்சேருங்கள்.
அனைவரும் பங்களிப்பு செய்து ஒரு பொது இடத்தை ஏற்பாடுசெய்யுங்கள்.
வெளியூர் நண்பர் உறவினர் தமிழர் எனில் அங்கு தங்க அனைத்து வசதியும் செய்து வையுங்கள். அந்தப்பொது இடத்தில் வடலூர்வல்லளார் போன்று செயல்பட வழி காட்டுங்கள். பொது இடத்தில் மாலை வேளையில் கம்புச்சண்டை கற்றுக்கொடுங்கள். மேலும் கை கால் சண்டைபோடப்பயிற்சி கொடுங்கள்.
தமிழர் சங்கத்தில் வந்தேறிகள், வந்தேறிகளின் பிறங்கடைகள் சேர முடியாது, கூடாது.
இது தமிழ்நாடு. தமிழர் நாடாக மாற்றப்பட வேண்டும். எனவே பிற மக்கள் விலகிவிடலாம்.
தமிழ்மொழியில் பிறமொழி எழுத்தைக் கலப்பவர் தமிழருக்கெதிரியே.
பிற மக்களுக்கு நாம் சொல்வது. தமிழ் மொழியில் பிறமொழி எழுத்தைக் கலந்து எழுதாதீர். அது எங்களை அழிப்பதாகும். உங்களது மொழி தமிழில்லை என்றால் இந்த நாடு உங்களுக்கல்ல. உங்களதுமொழி மொழித்தோற்றம் எந்த நாடோ அங்கு சென்று விடுங்கள் அல்லது தமிழராக மாறிவிடுங்கள்.
வேற்று மொழி வேற்றுஅடையாளத்தோடு இங்கு புண்படுத்தக்கூடாது ஏன்எனில் இந்நாடு தமிழ்நாடு.
பெண்களுக்குக் கல்வியை கட்டாயமாக்குங்கள்.மேலும் ஐம்பது விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குங்கள்.
இரண்டுகுழந்தைக்குமேல் பெற்றுக்கொள்ள வேண்டா.
உடல்நலம்உள்ளவர் அனைவரும் படைப்பயிற்சி பெற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழர் சங்கத்தில் பலதமிழர்கள் இணையவழி எளிதில் சேர்ந்து வருகின்றனர். விரைவில் இணையநண்பர்கள் உரையாடும்நிகழ்ச்சி நடத்த விழைகிறோம்
தமிழர்களுக்குஅடையாளஅட்டை கொடுக்க விரும்புகிறோம். உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு வட்டத்திலும்தமிழர்களின் கலந்துரையாடல் நடத்தவேண்டும் என்பதே எம்அவா.
தமிழர்களே உங்கள் கருத்துகளை, விருப்பங்களை எழுதி அனுப்புங்கள்.
இணைந்துள்ள தமிழர்களின் பெரும்பான்மை முடிவை நடை முறைப்படுத்துவோம்.
நம் குறிக்கோள் தமிழர்களை ஒன்றிணைப்பதே. நாம்தமிழரென்போம்
தொடர்புக்கு
9976712362/9789546510
ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவருடைய தாய்மொழி எது என்பதைப் பொறுத்ததே தவிர, அவருடைய பிறப்பைப் பொறுத்தது இல்லை. “தமிழர் சங்கத்தில் வந்தேறிகள், வந்தேறிகளின் பிறங்கடைகள் சேர முடியாது, கூடாது” எனும் வார்த்தைகள் இழிவானவை, கீழ்த்தரமானவை! இஃது இனவெறி! இப்படிப் பிறப்பின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ ஒருவருடைய தமிழின அடையாளத்தைத் தீர்மானிப்பது என்பது மனிதநேயத்துக்கு மட்டுமில்லை, தமிழ் இனப் பண்பாட்டுக்கும் எதிரானது. தமிழர் வரலாறு – பண்பாடு என எதுவுமே தெரியாதவர்கள்தாம் இப்படிப் பிதற்றுவார்கள். தமிழ் உணர்வு – தமிழின ஒற்றுமை எனும் பெயர்களில் இப்படிப்பட்ட இழிமுயற்சிகளை ஒருபொழுதும் ஆதரிக்க முடியாது!