asbestos-building01

   திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது துளுவபுட்பகிரி என்னும் சிற்றூர். வானம் பார்த்த பூமி. இச்சிற்றூரில் உள்ள பள்ளியானது கல்நார் (Asbestos) ஓட்டினால் ஆன கட்டடம். அந்த பள்ளி 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளமாகிவிடும்; வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் வெப்பம் தகிக்கும். இருப்பினும் இவற்றையும் தாண்டி அந்தப் பள்ளிக் குழந்தைகள் தரமாகப் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மீனாராசன் பள்ளிக்காகப் புதியக் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

  அவரின் முயற்சியைக் கண்ட ஊர்ப் பெரியவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தசாமி தன்னிடம் இருந்த 20 சிறுகாணி(செண்ட்டு) நிலத்தைத் தானமாகப் பள்ளிக்குக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியை மீனாராசன் சென்னை மைலாப்பூர் நகரச் சுழற்சங்க உதவியுடன் 2 ஆயிரத்து 425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட முயற்சிகள் எடுத்து மேற்கூரை ( roofing ) வரை வேலை முடிந்துள்ளது.. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கே கல்வி பயிலும் ஏழை, நடுத்தட்டு குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய ஒலி- ஒளி அமைப்புடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறார். ஏழைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி பணக்காரர்களும் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இச்சிற்றூரைச் சுற்றியுள்ள ஏழு சிற்றூர்களிலும் 1500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டி முடிக்கப் படும்போது 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள். மேற்கூரை வரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் மேலும் உள்கட்டமைப்பு, கழிவறை, சுற்றுச்சுவர், நண்பகல் உணவுஅறை, சமையலறை போன்றவை கட்டி முடிக்க இன்னும் உரூ. 15 இலட்சம் வரை தேவைப்படுவதால் உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட முயலுங்கள்.

தொடர்புக்கு- மீனாராசன் – 09600142437

மின்வரி – dmeenarajan@gmail.com

காசோலை அனுப்புவோர் கீழ்க்காணும் பெயரில் காசோலையை எடுக்கவும்:

 SSA Aided Primary School,Thuluvapushpagiri

முகவரி : மீனாராசன், 28/2, 12 ஆம் நிழற்சாலை, வைகை குடியிருப்பு,

அசோகர் நகர், சென்னை 600 083

வங்கியில் பணமாகச் செலுத்துவோர் கீழ்காணும் கணக்கில் செலுத்தலாம்:-

SSA Aided Primary School, Thuluvapushpagiri, State Bank Of India Santhavasal Branch.

A/C . NO: 32417332164

IFSC NO:  SBIN0004879

mudhuvai hidayath01தரவு : முதுவை இதாயத்து