பேரன்புடையீர்,

வணக்கம்.

 பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்

 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இலக்கியச் சொற்பொழிவு:

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

முனைவர் மு. இளங்கோவன்

உதவிப்பேராசிரியர்

கா.மு.ப.மே.மையம், புதுச்சேரி, இந்தியா

நூல்கள்: அரங்கேறும் சிலம்புகள், மாணவராற்றுப்படை, பனசைக்குயில் கூவுகிறது, அச்சக ஆற்றுப்படை, மராட்டிய ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் பேராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள், பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு, மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள், பழையன புகுதலும், வாய்மொழிப் பாடல்கள், நாட்டுப்புறவியல்,அயலகத் தமிழறிஞர்கள், இணையும் கற்போம்.

http://muelangovan.blogspot.com – இந்த இணைப்பில் இவரின் எழுத்துகள், ஆவணப்படக்  காணொளிகளைக் கண்டுகளிக்கலாம்

https://www.facebook.com/muelangovan – இந்த இணைப்பில் இவரின் விவரங்கள் உள்ளன

 

தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28  (01/28/2018)

நேரம்: கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை

(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)

பல்வழி அழைப்பு விவரங்கள்:

தொடர்பு எண்: (641) – 715 – 3670

நுழைவுக்குறியீட்டு எண்: 873905#

 

முனைவர் மு. இளங்கோவன் பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார்.

நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில்

பல்வழி அழைப்பின் வாயிலாகக்

கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

 

பேரவை இலக்கியக்குழு

இரமாமணி செயபாலன்,

செயலாளர்,

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

919-493- 2812