புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது
புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார்.
அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார்.
தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், முனைவர் எழில்வசந்தன், இரமேசு, கலைஇலக்கியப்பெருமன்றத் தலைவர் வீர.முருகையன், பொதுச்செயலாளர் எல்லை. சிவக்குமார் ஆகியோர் இந்தச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Leave a Reply