தினமலர் பட்டம் 01 : dinamalarpattam01 தினமலர் பட்டம் 01 :dinamalarpattam02

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு

“அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிலையில் இப்பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  பல ஆயிரம் மாணவர்கள் போட்டியிட்டுள்ள தினமலர் பட்டம் – பட்ட அவையில் உறுப்பினராகி (மொத்தம் 50 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி ) உள்ள அதிகமான மாணவர்கள் மிகப் பெரிய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையிலும் அரசு உதவி பெறும் தமிழ் வழிக் கல்வி பயிலும் இப்பள்ளி மாணவி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் அன்பு அம்புகள் பகுதியிலும், வெங்கியைக் கேளுங்கள் பகுதியிலும் கேள்விகள் கேட்டு ஆர்வத்துடன்  விடைகள் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கன. பட்ட அவை உறுப்பினராகி விரைவில் பயிற்சிக்குச் செல்ல உள்ள மாணவி பரமேசுவரிக்கும், தொடர்ந்து அவளுக்குப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர் திரு. சிரீதர்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம், ஆசிரியை, ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமும் வாழ்த்துவோம்!

jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/