52emptyhotels

  தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை அருகே ஏறத்தாழ 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

   இப்பகுதியில் இதுவரை 110க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு கொடைக்கானல் செல்லும் பாதையை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்பவர்கள் தாண்டிக்குடி, பழனி வழியாகக் கொடைக்கானல் சென்றனர். இப்போது இருசக்கர, சிறிய வகை ஊர்திகள் மட்டுமே பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன.

   இந்நிலையில் மலைப்பகுதியில் தொடர்ச்சியாகத் தொடர்ந்து மழை பொழிவதால் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் மாலைவேளையானால் ஊர்திகளை இயக்க அச்சப்படுகின்றனர். மேலும் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டால் கொடைக்கானல் நோக்கிச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்லுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

  மலைச்சாலையிலிருந்து டம்டம்பாறை வரை ஏராளமான சாலையோர உணவகங்கள், தேநீர்கடைகள், இளநீர் கடைகள் உள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாலைப்பகுதியில் 24 மணிநேரமும் போக்குவரத்து இருக்கும்.

   இந்நிலச்சரிவால் கதவடைப்பு நடைபெறும் நாள்போன்று ஒவ்வொரு நாளையும் இப்பகுதிமக்கள் உணர்கின்றனர்

 

 

52vaigaianisu_name