தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது.
சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார்.
திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.
முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார்.
முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனவைர் இராமகி, பொறிஞர் நாக.இளங்கோவன், முனைவர் இரா.சேது ஆகியோர் கருத்துரையாற்றினர்.
செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேலு நிறைவுரை யாற்றினார்.
ஊடகர்முருகுவண்ணன் நன்றி நவின்றார்.
பொறிஞர் அருட்கண்ணனார், செம்மல் இரா.கோவிந்தன், மரு.செம்மல் முசுதபா, முனைவர் குமரிச்செழியன், பொறிஞர் இரா.வாசுதேவன், முனைவர் திருக்குறள் வெற்றிவேல், முனைவர் பானுமதி, காந்தளகம் சசிரேகா, முனைவர் மு.கருணாநிதி, அறிஞர் அமைதி ஆனந்தம், புலவர் செம்பியன் நிலவழகன், புலவர் எழிலரசு, ஆய்வாளர் வே.பிரபாகரன், ஊடகர் மோகன்ராசு, பொறிஞர் தி.ஈழக்கதிர் முதலான பலர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பங்கேற்றனர்.
படங்கள் : இசை ஊடகம், முருகு வண்ணன், மோகன்ராசு, ஈழக்கதிர்
Leave a Reply