புதுவைத்தமிழ்ச்சங்கம், மகளிர்விழா : puthuvaithamizhchangam_magalirvizhaa

  புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக  மகளிர் விழா,  புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

  விழாவில்  பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர்

  புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்

  துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு  துணைச்செயலர் கோ.கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர் தியாகி பாவலர் மு.அப்துல் மசீத்து  நன்றி கூறினார்

       விழாவில் கல்லூரி மாணவிகளின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன

  நிகழ்வினை புதுவைத் தமிச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலைமாமணி கல்லாடன், கலைமாமணி முனைவர் அ.கனகராசு, செந்தமிழ் அருவி கலக்கல் காங்கேயன் ஆகியோர் நெறிப்படுத்தினர்

 விழாவில் கலைமாமணி கோனேரி.பா.இராமசாமி, புலவர் சிவ.இளங்கோவன், கலைமாமணி இ.பட்டாபிராமன், கலைமாமணி அரங்க.நடராசன் ஆகியோர், திரளான தமிழறிஞர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.