தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்
முன்னுரை - க. அன்பழகன்
தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் ...