தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்: 1/2
பேராசிரியர் வெ.அரங்கராசன்
உயர்தமிழ்ப் பண்பாட்டின் உச்சம்
அயராது விருந்து ஓம்புதலாம்
தென்புலத்தார் தெய்வம் விருந்ஒக்கல்
தான்என்ஆங்
ஐம்புலத்ஆ ஓம்பல் தலை
பொருள்கோள் விரிவாக்கம்:
விருந்து, தென்புலத்தார், தெய்வம், ஒக்கல்,
தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறுவழியும் ஓம்பல் தலை.
பொருள் விரிவாக்கம்:
வாட்டும் கடும்பசியால் வருந்தி வரும் புதியவர்களாகிய விருந்தினர்கள்,
தெளிந்த அறிவு ஆற்றலர்கள்,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற - ...