image-39897

“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!”

“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்!” சிதம்பரம் 'வள்ளலார் பெருவிழா' வில் தீர்மானம்! தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார் பெருவிழா”வில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த்தேசியப் ...
image-39893

தமிழ்க்கூடல், 20.01.21

தை 07, 2052 / 20.01.21 புதன் கிழமைகாலை 11.00 உலகத் தமிழ்ச்சங்கம், மதுரைதமிழ்க்கூடல் கூடலுரை : காரைக்காலம்மையாரும் இந்தியப் பெண் கவிஞர்களும் முனைவர் யாழ் சந்திராதமிழரின் மரபுவழி மருத்துவம் :திரு சு.முத்தையா  
image-39887

பாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா

பாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா பாதிரி ஊராட்சி மன்றமும் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கமும் இணைந்து தைத்திருநாள் பொங்கல் கலை இலக்கிய விழா வந்தவாசியை அடுத்த பாதிரி ஊரில் உள்ள காந்தித் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் வந்தை வட்டக் கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ. இரகமத்துல்லா தலைமை வகித்தார். பாதிரி ஊராட்சி ...
image-39883

பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும்   பெருந்தலையின்(Bigg Boss) தமிழ் நிகழ்ச்சியின் நான்காம் தொடர் இப்பொழுது நடைபெற்று வருகிறது. நாளை (தை 4 / 17.01.2021 அன்று) நிறைவுபெற உள்ளது. இதன் முடிவாக வாகையாளரை அறிவிக்கும் பொழுது விசய் தொலைக்காட்சி நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்ளும் என்பதே பலரின் வருத்தமான நம்பிக்கையாக உள்ளது. அந்த அளவிற்கு அந்நிறுவனத்தின் ...
image-39879

உலகெங்கும் பொங்கல் திருவிழா! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா,  ஆகிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் விழா அட்டோபர் – நவம்பரில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் செட்டம்பர் முழுநிலவு நாளை ...
image-39876

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை அனல் வினா மன்றம் தை 03, 2052 ஞாயிறு 16.01.2021 காலை 8.00 சான்பரான்சிசுகோ காலை 11.00  நியூயார்க்கு இரவு 9.30 இலங்கை / இந்தியா பட்டி மன்றம் * கருத்துக் களம் * வினாடி வினா மையப் பொருள் : வாசிப்பு தமிழ் விவாதிகள் கழகம், இலங்கை
image-39870

தமிழர் திரு வார வாழ்த்து, 2052 / 2021

அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.   (திருவள்ளுவர், திருக்குறள் ௲௩௰௩) வேண்டாதன போக்கும் போக்கி நாள், உழவரைப் போற்றும் பொங்கல்  திருநாள், திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு, மாட்டுப் பொங்கல் திருநாள், பண்பை வளர்க்கும் காணும் பொங்கல் நாள் ஆகிய தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! இன்பம் தங்கி இன்னல் அகலட்டும்! வளமை நிறைந்து வறுமை தொலையட்டும்! ஒற்றுமை ஓங்கிப் போர் ...
image-39862

வாழ்ந்திடுமோ தமிழ்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!    நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில் எழுதுவது மில்லை பைந்தமிழில் பாடுவது மில்லை செந்தமிழில் பெயரிடுவது மில்லை கன்னித்தமிழில் கற்பது மில்லை இன்றமிழில் பூசிப்பது மில்லை மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை தமிழனென்று எண்ணுவது மில்லை தமிழ் வாழ்க வெல்க  என்றால் வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!  இலக்குவனார் திருவள்ளுவன்
image-39858

குவிகம் அளவளாவல், 10.01.2021

மார்கழி 26, 2051 / 10.01.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் ம.வே.சிவகுமார் எனும் நண்பனும் படைப்பாளிகள் கூட்ட எண் : 619 157 9931 கடவுச் சொல் : kuvikam 123 அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       
image-39854

கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன்

கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில்   ழகரம் யகர ஒலிப்பின்றித் தமிழனின் நாக்கில் தவழ்ந்தது தலை நகர் கிளை நகர் அத்தனையிலும் தலைமையானதென் தமிழ் மொழி   வணிக மொழிகளில் கூட வலிமையானது என் தமிழ் மொழி வீதியில் நின்ற விவசாயிகள் வீட்டுக்கு வந்தனர்   நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர் நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர்   வழக்கு மன்றங்கள் எல்லாம் வழக்கின்றி வலு விழுந்தன காவல்துறை எல்லாம் ஏவல் பணியைக் ...
image-39851

இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி, சனவரி 07

சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் நடத்தும் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி  முகிப்புல் உலமா முகம்மது மஃரூபு பங்கேற்பு சென்னையில் ஃபகீமிய்யா  பதிப்பகம் சார்பில் இலக்கிய இளைப்பாறுதல் நிகழ்ச்சி மார்கழி 23, 2051 / 07.01.2020  வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு எழும்பூர் தே.ப.ச.(இக்குசா) மையஅரங்கில் நடக்க இருக்கிறது. இந்த அரங்கம் கன்னிமாரா நூலகம் -  அரசு அருங்காட்சியகம் எதிரில் அமைந்துள்ளது. நிகழ்ச்சிக்கு இசுலாமிய இலக்கியக் கழகத் ...
image-39847

சிலம்பப்போட்டிப் பரிசளிப்பு விழா

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா      சேத்துப்பட்டு. சன.04. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சேத்துப்பட்டு திவ்வியா கல்விக்குழும வளாகத்தில் நடைபெற்றது.         திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் ...