image-38911

திருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனார் – முனைவர் கி.சிவா

திருக்குறள் தொண்டர் பூவை.பி. தயாபரனாரின் வாழ்வும் அறப்பணிகளும் 1/3 தமிழால் தமிழுக்காகவும் திருக்குறளால் திருக்குறளுக்காகவும் வாழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் பெருமகனார்தான், திருச்சி மாவட்டம், திருத்தவத்துறை என்னும் இலால்குடியை அடுத்த பூவாளூர் என்னும் ஊரில் பிறந்து தற்போது புள்ளம்பாடியில் வாழ்ந்து வருகின்ற தயாபரனார் அவர்கள். ஆளாளுக்கு ஓர் ஆசை உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தார்க்கும் திருக்குறளைப் பரப்புவதில் மிகுந்த ஆசை. அத்தோடு அறப்பணிகள் ...
image-38904

தரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்

தரணி ஆளும் தமிழ்    உலகறியும் மொழிகளிலே தமிழ் மொழிபோல் உயர்தனிச்  செம்மொழி வேறில்லை ! இலக்கண இலக்கிய வரலாற்றோடு இலங்கும் தமிழுக்கிணை ஏதுமில்லை !   பொதிகை மலைச் சாரலாய்ப்  புவிமீது பார்போற்ற வாழும் மொழித் தமிழாகும் ! வாழ்வியலாம் வள்ளுவத்தில் நிலைபெற்று வான் போற்றும் தமிழெங்கள் அமுதாகும் !   சங்கம் வளர்த்த மாமதுரை வீதியெங்கும் அங்கமாய்த் தமிழ்த்தூண்கள் அரணாகும் ! மூவேந்தர் புகழ் பாடிப்  பாரெங்கும்  முத்தமிழே இனி எங்கள் உரமாகும் !   வரிவடிவத் தமிழின் தொன்மைக்குச் சான்றாகி  வைகையாற்றுத் தமிழர் நாகரிகமாய்க்  கீழடி ! உலகின் முதல் மொழித் தமிழென்று  உணர்த்துகின்ற அகழாய்வே எங்கள் தாய்மடி !   ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட திருக்குறளே இணையிலா உலகப் பொதுமறை ! ஓராயிரம் ஆண்டுப் பழமை உரைக்கின்ற ஆத்திச்சூடி நாமறிந்த திருமறை !   பிராமி வடிவம் தமிழுக்கு மூலமென மாங்குளத்துக்  கல்வெட்டு விளக்கியது ! இன்றளவும் ஒலிவடிவம் வரிவடிவம் காத்து குன்றமென நின்றே தமிழ் துலங்கியது !   தமிழைப்போல் இனிதான மொழி வேறில்லையென  தரணிக்கு எடுத்துரைத்தான் நம் மகாகவி ! தமிழெங்கள் உயிருக்கு நேரென்று நெஞ்சுயர்த்தி அமுதமொழித் தமிழ்தான் என்றான் புரட்சிக்கவி !   உலகெங்கும் கால்பதித்த தமிழரின் மேன்மை பலகாலம் பறைசாற்றும் தமிழின் மாண்பை ! தன்னிலிருந்து மலர்ந்த சொல் தம்இழ்   தரணி ஆளும் தமிழுக்கு மகுடமாகும் !   கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் , சென்னை  600100  9443259288  
image-38898

ஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

ஞாலம் ‘கவிதைக் குரல்கள்’ கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு சென்னையில் செயல்பட்டு வரும் ஞாலம் இலக்கிய இயக்கம் ஆண்டுதோறும் பாவேந்தர் விழாவை முன்னிட்டு ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மகுடை (கோரானோ) தாக்கத்தின் காரணமாகத் தாழ்ச்சியாக வெளிவர இருக்கிறது. ‘கவிதைக் குரல்கள்’ என்னும் தலைப்பில் வெளிவர இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் ...
image-38895

01.02.1965 : உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்

01.02.1965 உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார் மறைமலை இலக்குவனார் : என்னுடைய பதிவு 2/5/65 அன்று என் தந்தையார் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தளைப்படுத்தப்பட்ட செய்தியைக் குறித்தது. இது தொடர்பாக இன்னும் பல செய்திகளைக் கூறவேண்டும். ஆனால் இதற்கு முன்னதாக 1/2/65 அன்று இந்தியக் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட செய்தியைக் ...
image-38890

மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள் – மறைமலை இலக்குவனார்

மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள் 02.05.1965 செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் வேலூர்க் கொட்டடியில் தளைப்படுத்தப்பட்ட நாள்.நேற்று நடந்தது போன்று நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.எங்கள் வீட்டு வாசலில் ஒரு வாடகை மகிழ்வுந்து வந்து நின்றது.வண்டியிலிருந்து இறங்கிய நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் “ஐயா,மாடியில்தானே இருக்கிறார்கள்?” என்னும் வினாவை எழுப்பியவாறே எங்கள் விடைக்குக் காத்திராமல் மாடிக்கு ...
image-38884

அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்

அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் வெட்டவெளிப் பொட்டலிலும் வேக்காடு வேனலிலும் கொட்டும்மழை குளிரினிலும் கொடுநோயின் பிடியினிலும் வட்டமிட்டே உழைத்தாலும் வாழ்நாள் முழுவதிலும் தட்டுக்குச் சோறின்றி தடுமாறும் உழைப்பாளி! எட்டு மணிநேரம் என்பதெலாம் பொய்ச்சட்டம் கிட்டும் நேரம்வரை கிழட்டுப் பருவம்வரை திட்டமிட்டே உழைக்கின்ற தேசத்தின் முதுகெலும்பு பட்டம்பதவி விரும்பாத பாசத்தின் அச்சாணி இங்கே... வருக்க பேதங்கள் வாதங்கள் மாறியதா? சொர்க்கம் நரகமென்ற சோதனைகள் குறைந்தனவா? இருப்போர் இல்லாதோர் இரண்டுநிலை மாறியதா? கற்போர் கல்லாதோர் கல்விபேதம் அழிந்ததுவா? கொரோனா கூட இன்று கொள்ளைநோய் என்றாலும் இருப்பவர்க்குப் பெரிதாக இன்னல் தரவில்லை இருப்பு இருப்பதனால் இல்லத்தில் இருந்திடுவார் விருப்பப் பட்டதையும் வாங்கித் தின்றிடுவார் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் தினக்கூலி பஞ்சாய் அலைகின்ற பாவநிலை காண்கையிலே நெஞ்சு ...
image-38879

தோழா கலங்காதிரு! – சி. அன்னக்கொடி

தோழா கலங்காதிரு தோழா விடிகாலைப் பொழுது நமெதென எழுந்திரு தோழா! சோதனைகள்தான் புதுசா தோழா வேதனைகள்தான் பழசா தோழா வியர்வை சிந்தி உழைத்திடும் நமக்கு வேலையில்லை என்பதைவிட வேறென்ன கவலை தோழா! அடுப்பங்கரையில் எலியும் அடுப்பில் துரு ஏறியிருப்பதைவிட வேறென்ன கவலை தோழா! வயிறொன்று இருப்பதை அறியாமல் நீரற்ற வெறுங்குடத்தை எட்டிப் பார்ப்பதைவிட வேறென்ன கவலை தோழா! தோள்கள் இரண்டும் உழைப்பிற்காய் தினவெடுத்து திரிகின்றன என்பதைத் தவிர வேறென்ன கவலை தோழா! இல்லாள் மையிடாமல் மலர்சூடாமல் இருக்கிறாள் என்பதைவிட வேறென்ன கவலை தோழா! உயிர் வாழ்வதற்காய் ஒரு பொட்டலத்துக்காய் காத்திருப்பதைவிட வேறென்ன கவலை தோழா! சோதனைகள்தான் புதுசா தோழா. வேதனைகள் தான் பழசா தோழா. காரிருள் அகல கதிரவன் வருவான் கவலையைவிடு தோழா! - வழக்குரைஞர் சி. அன்னக்கொடி 
image-38875

சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ...
image-38871

புதை நூல் – தமிழரசி இளங்கோவன்

புதை நூல்             “மங்களத்து நாயகனே, மண்ணாளும்..”, என்ற அம்மாவின் பக்திக் குரல் தூபம் காட்டியவாறே வீட்டை வலம் வந்தது. வீடே புகை சூழ இருந்தது.      ‘டப்,டப்,டப்..’, என்று கோழித் தீனியைக் கொத்துவது போல் கமலாவின் அறையிலிருந்து ஒலி எழும்ப, அம்மா, கமலா அறையின் கதவைத் திறந்து தூபம் காட்டும் பெயரில் அறையையும் விட்டு வைக்காமல் ஒரு ...
image-38867

“மதுக்கடைகளை நிலையாக மூடுக” மகளிர் ஆயம் வேண்டுகோள்!

“மதுக்கடைகளை நிலையாக மூடுக” மக்கள் முழக்கமாகட்டும் ! மகளிர் ஆயம் வேண்டுகோள்! மகுடை(கொரோனா) ஊரடங்கால், தமிழ்நாட்டில் அரசுசாராயக் கடைகள் கடந்த மார்ச்சு மாதம் 27-இலிருந்து ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன. அன்றாடம் குடித்துப் பழகிப் போனவர்கள் 90 விழுக்காட்டினர் ஒரு மாதமாகக் குடிக்க வழியில்லாமல், குடிக்காமல் இருந்து பழகிவிட்டார்கள். குடிகாரர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தவறான வழிகளில் சாராயத்திற்கு மாற்றாக வேறு தயாரிப்புகளைக் ...
image-38860

கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு! இவரும் தவறு! – இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துக் கதிர் 1.20 அவரும் தவறு! இவரும் தவறு! மகுடைத் தொற்றுத் தடுப்பு தொடர்பாக  அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் காணுரை மூலமாக நடத்த வேண்டும்  என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.தாலின் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். பிற எதிர்க்கட்சியினரும் அவ்வாறுதான் வேண்டிவருகின்றனர். ஆனால் முதல்வர் தேவையில்லை என மறுத்து வருகிறார். அதற்காக அவரும் பிற அமைச்சர்களும் லும் காரணங்கள் சரியில்லை. எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் இருந்தவர். ...
image-38864

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்! கேட்டாரையும் கேளாரையும் பிணிக்கும் நாவரசர் ஒளவை நடரசான் அவர்களின் எண்பத்தைந்தாவது பிறந்தநாள் பெருமங்கலம் இன்று(24.04.2020). அவரிடம் அலைபேசியில் பேசும் பொழுது “புதுச்சொல் புனையும் திறனாளர் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தி மகிழ்வித்தார். நான், மதுரையில் உள்ள தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்ற பொழுது அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து ...