image-27673

தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தக்கவர் சசிகலாவே! ?  அஇஅதிமுகவின்  பொதுச் செயலாளராக  யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா?   ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள்  அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் ...
image-27668

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு

    வணக்கம். வரும் ஞாயிறு மார்கழி 03, 2047 /  18.12.2016, பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்பு. காலை 9 மணி முதல் நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவரும் வருக. அன்புடன் அழைக்கிறோம் இரா. பூபாலன் <boobalanpoet@gmail.com>
image-27662

புதிய அரசிற்கு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!   மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06,  2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு 'அகரமுதல' இதழ் வாழ்த்துகிறது.   இதற்கு முன்னர் இரு முறை   முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார்.  எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான் இருந்தார்.   இப்பொழுதுதான் முதல்முறை முதல்வராகவே செயல்படும் வகையில் முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். எனவே, தன் ...
image-27660

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6

(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி)   மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும்                                                                                          70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் ...
image-27646

வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு! – புலவர் தி.வே. விசயலட்சுமி

வளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு!   ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இக்காப்பியத்தில் 66 பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தி, சிலப்பதிகாரம் முதலிய சில நூல்களின் உரையில் இதிலுள்ள சில பாடல்கள் காணப்படுகின்றன.   காப்பியக் காலத்தில் கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. நவகோடி நாராயணன் ...
image-27655

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி)   பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 ‘கல்வி’ க்கான விளக்கம் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். ...
image-27640

புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் – புலியூர்க் கேசிகன்

புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம்   பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும்.   அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும் அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும்.   ...
image-27643

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு – அ.சிதம்பரநாதன்

வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு   சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம், 'நல்லதன் நலனும் தீயதன் தீமையும்' இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று ...
image-27633

அகத்தியர் என்ற சொல் தமிழே! – அ.சிதம்பரனார்

அகத்தியர் என்ற சொல் தமிழே!   அகத்தியர் என்ற சொல்லை அகத்தியம் என்ற வடசொல்லின் திரிபு என நம் நாட்டில் பலர் நம்பி வருகிறார்கள். அகத்தியம் என்பது அகத்தி என்ற ஒரு கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது ஒன்றாம். தமிழில் அகத்தி என்பது இருத்தல் போலவே மலையாளத்திலும் அகத்தி என்ற சொல் உண்டு.  செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: ...
image-27636

நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! – ஆறு.அழகப்பன்

நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! நல்லனவற்றிற்கு ஆசைப்படுவது தீங்கான செயலன்று. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாலும், நல்ல மனமுள்ள ஒரு மலையேறுபவன் மனம் வைத்தால் அந்தக் கொம்புத் தேனை முடவனுக்குக் கொடுக்க முடியாதா?  கலைமாமணி ஆறு.அழகப்பனார்: நாடகச் செல்வம்: பக்கம்.136
image-27629

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு  உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள்   திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016  அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு  உரூ. 20,000 பெறுமதியான கற்றல்  துணைக்கருவிகள் அன்பளிப்பாக ...
image-27612

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல்     புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக  கார்த்திகை 24, 2047 / 09.12.2016 ...