image-34658

சிங்கப்பூரின் தந்தை (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, சென்னை

தமிழ்நாடு - சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில், செந்தமிழ் மொழியை சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கிய சிங்கப்பூரின் தந்தை நினைவில் வாழும் (இ)லீ-குவான்-இயு வின் பிறந்த நாள் விழா, புரட்டாசி 01, தி.பி. 2049  திங்கட்கிழமை 17.9.2018 மாலை 5.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் 'பாரதீய வித்யாபவன்' குளிரி முதன்மை அரங்கில் நடைபெறுகிறது. இக்கழகத்தின் அமைப்பாளர் தஞ்சை ...
image-34655

தமிழ் – ச.சுதாகர்

தமிழ் தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க, தொடங்கினேன் கற்க தொல் காப்பியம். குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல் எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்; என் உயிர் உள்ள வரை, உணவு போல் உயிர்மொழித் தமிழை மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே! ச.சுதாகர் 
image-34647

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

எம்மை மகிழ்விப்பாய்!   என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் நீ வந்து எம்மை மகிழ்விப்பாய்!   - இளவல்  
image-34643

திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை

ஆவணி 31, 2018 ஞாயிறு 16.09.2018 மாலை 5.00 மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை  6 தொகுதிகள் வெளியீடு தலைமை: பி.வரதராசன் முனைவர்: சு. இராமர் மூதறிஞர் இரா.இளங்குமரன் புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை  
image-34639

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !    எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ...
image-34633

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

  புரட்டாசி 30, சனி 15.09.2018  மாலை 6.00 விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்  சிறப்புரை : சத்தியானந்தன் திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும் துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்   சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004  (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 அரங்கம் அடைய  
image-34627

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! -மறைமலை இலக்குவனார்

பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா? ஆண், பெண் வேறுபாடுபற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை ...
image-34625

தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !

விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : தலைமையர் வி.உருத்திரகுமாரன் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.  ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கை ...
image-34621

சாக்கடை  தருமோ நறுமணமே! – ச.சுதாகர் 

சாக்கடை  தருமோ நறுமணமே! உள்நோக்கம் தீதாய் ஊருக்கு நல்லதாய் சொல்செயல் காட்டிடும் சூது மனமே நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும் சாக்கடையும் என்றும் தருமோ நறுமணமே   ச.சுதாகர் 
image-34616

எழுவர் விடுதலை:  முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி

எழுவர் விடுதலை:  முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!   இராசீவு கொலை வழக்கில் சிக்கிய எழுவரை விடுதலை செய்வது அநீதியானது;  உலகெங்கும் நடைமுறையில் இல்லாதது என்பனபோல் சிலர் கூக்குரலிடுகின்றனர். நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் ...
image-34613

தமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி

 இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி   புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.   புதுவைத் ...