தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1

 - தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்     அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் ...
image-50

வாழ்க தமிழ் பேசுவோர்..

-    வித்யாசாகர் 'வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி'யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ... (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ? ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ ...
image-47

சருகாகிக் கருகும் அரும்புகள்

                                                                                    -   முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள்.   வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும்.   வாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள்.   நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில் கிடக்கும் பிரம்மாக்கள் பெற்ற பிள்ளைகள் இவர்கள்.   வண்ணங்களோடு வளையவரும் வசந்தக் கனவுகளை இமைகளில் தேக்கியிருந்தாலும் இவர்களின் ...
image-39

இதழ்களின் நிலை என்ன?

இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் ...

நாணுத்தரும்

-       முனைவர் ஔவை நடராசன்   ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம்  முதலான மொழிகள்  தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச்  சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் தமிழ் உரையாடலில் இழைய விடுதலால் இனிய தமிழ்ச் சொற்கள் ...
image-35

மீனியல் (Icthyology)

-       பேரா.முனைவர்  இலக்குவனார் மறைமலை 'பெரிதே உலகம் பேணுநர் பலரே' என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ''ஆழிசூழ் உலகம்'' என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள்,  பெரும் வாய்க்கால்கள் போன்றவற்றால் நிரப்பப்படுவதனாலும், ...
image-33

காப்பாற்றுங்கள்……….!

- களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….? தமிழ் நாட்டில் தமிழ்வாழ, நூறுபேர் சாகும்வரை. உண்ணா நோன்புப் போராட்டம். முதலமைச்சர், தலைமைச் செயலாளரை ...

எது சொந்தம்?

-     இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன் விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே        வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்! கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி         காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது அமர்ந்தபடி பார்த்திருந்தான் விலகும் ஆடை  அலைபரப்பும் வெளிச்சத்தில் தனைம றந்தான்! நிமிர்ந்தபடி அவள்நின்றாள்! “எதனைக் கண்டீர்  நீந்துகின்றீர் இன்பத்தில்” என்றாள் மங்கை “ஆடாத கோபுரத்தின்  கலசந் துள்ளி ஆடுவதை நான்கண்டேன்! எந்த நாளும் வாடாத தாமரையாய் முகத்தைக் கண்டேன்!        ...

சோர்விற்கு விடைகொடு!

- தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும் - பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் ...

தமி்ழ்க் கோட்டம் அமைய நன்கொடை வேண்டுகிறோம்!

பேரன்புடையீர், வணக்கம்.   தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக அமையவுள்ள ‘தமிழ்க் கோட்டம்’ எழுவதற்குத் தாங்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம். தங்களின் உதவியானது காலந்தோறும் நன்றியோடு நினைவுக் கூரப்படும்.   தமிழ் உள்ளமும் உணர்வும் கொண்ட தாங்கள், இந்தத் தூய்மைத் தமிழ்ப்பணிக்குக் கண்டிப்பாக உதவுவீர்கள் எனப் பெரிதும் நம்புகிறோம். நாம் வாழும் காலத்தில் தமிழுக்குச் செய்யும் ஓர் அரும்பணியாகவும் நிலையான ...
image-25

அன்று இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் – இன்று எம் உள்ளத்தில்

1 திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் 2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் 3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம் 4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் 5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் 6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் 7 மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் 8 அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் 9 முல்லைத்தீவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 10 விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் 11 ...