தமிழக வரலாறு 1/ 5
அரசியல் வரலாறு
இன்றுள்ள தமிழ் நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்கள், பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் என்று பெயர் பெறும். இவையாவும் ஏறத்தாழக் கி. பி. 300-க்கு முற்பட்டவை. இந்நூல்களில் உள்ள செய்திகள் எல்லாம் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆட்சியையே ...