(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
3. காமத்துப் பால்
15. கற்பு இயல்
131. புலவி
தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர்,
கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும்
(01-05 தலைவி சொல்லியவை)
புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
அவர்படும் துயரைக் காண்போம்
சிறிது; மனமே! நீ வேறுபடு.
1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது
...