(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – தொடர்ச்சி)
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை)
பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:
பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ...