image-20208

மொழி பெயர்ப்போம்! – அருணகிரி

மொழி பெயர்ப்போம்!  உலகப் புகழ் பெற்ற எண்ணற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழில் வெளிவந்து உள்ளன. அதன் வழியாகப் புதிய கருத்துகள் தமிழகத்தில் பரவி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மாசுகோ முன்னேற்றப்பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வந்த நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் இந்தியாவிலும் தமிழகத்திலும் பொது உடைமை இயக்கத்தின் கருத்துப் பரவலுக்குப் பெருமளவில் உதவின. அத்துடன், அவற்றைப் படித்த வாசகர்களின் மனங்களில் ...
image-19573

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19   தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘           நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்             வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘           உற்றான் அளவும் பிணியளவும் காலமும்             கற்றான் கருதிச் சொல்’ 40 ‘           ...
image-20067

அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!

அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!   மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே! இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 ...
image-20135

மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி

12.01.2047 / 26.01.2016 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : - மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2
image-20033

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை பேரறிஞர் அண்ணா  நினைவுநாளை முன்னிட்டுத் தை 20, 2047 / பிப்.03,2016 அன்று  இரவு 7.00 மணிக்கு - சென்னை, மதுரை,  திருச்சி, கோவை, திருநெல்வேலி முதலிய - அனைத்துத் தமிழக  வானொலி நிலையங்களிலும் பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை நினைவுரை ஒலிபரப்பாகிறது.
image-20051

திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா

  தனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை:  முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார்  நன்றியுரை:  கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர்  : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்:  கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை
image-20132

பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!

தமிழர் கணக்கியல் - பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்!   தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த ...
image-20116

மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற ...
image-20126

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்

காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது.    முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி ...
image-20036

அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்! – அறிஞர் அண்ணா

  நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், ...