image-19643

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே! : குடிஅரசு – தலையங்கம்

தமிழர் திருநாள் என்றால் அது பொங்கல் நாள் மட்டுமே!   உழுது பாடுபட்ட பாட்டாளி உழுபயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்!! மழையென்றும் வெயில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் - எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும், ...
image-19639

நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே! – மு.பொன்னவைக்கோ.

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்! பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலென பொங்கலிட்டு வாழியவே!  முனைவர் மு.பொன்னவைக்கோ
image-19658

வளந்தரும் வாழ்த்து

வளந்தரும் வாழ்த்து சுண்ணச் சுவர்கள் மின்னலிட வண்ணக் கோலம் பலவகையாக மாவிலைத் தோரணம் காற்றாட மல்லிகைச் சரங்கள் மணந்தாட கொஞ்சும் புத்தாடை குதுகலமாக மஞ்சள் இஞ்சி மங்கலமாக பச்சரிசி பொங்கல் பளபளக்க கட்டிக் கரும்பு நாவினிக்க தந்தையும் தாயும் வாழ்த்திட சிந்தைசீர் மகன்மகள் வணங்கிட இல்ல மகளிர் யாவருமே விளக்கேற்றி வருகதிரைத் துதிக்க உற்றார் உறவினர் ஒன்றுகூடி பற்றுடன் பொங்கலோ பொங்கலென தமிழர் திருநாளில் குடும்பமுடன் தழைத்து வாழ்கநீர் பல்லாண்டே. . . . தமிழகத்தாய்க்குழு . . . பொன் ...
image-19653

ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும்   பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.   கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் ...
image-19650

தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை

முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் ...
image-19636

நம்வாழ்வு விடிந்திடட்டும் ! – எம்.செயராமன்

      வெள்ளம்  வடிந்தோட வேதனையும் விரைந்தோட உள்ளமெலாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடட்டும் நல்லவை நம்வாழ்வில் நாளும்வர வேண்டுமென்று நாம்பொங்கி மகிழ்ந்திடுவோம் நம்வாழ்வு விடிந்திடட்டும் ! இயற்கை தந்தவிடர்கண்டு ஏக்கமுற்று விழுந்திடாமல் முயற்சியுடன் உதவிநின்றார் முழுமனதை வாழ்த்திநின்று அயற்சிதனை விட்டெறிந்து அனைவருமே அணைந்துநின்று உயற்சிதர வேண்டுமென்று உளமாரப் பொங்கிநிற்போம் ! நீர்பெருகி நின்றதனால் நீரருந்த முடியாமல் ஊர்மக்கள் யாவருமே உயிர்துடித்து நின்றார்கள் நீர்வற்றிப் போனாலும் நிம்மதியைத் தேடுமவர் சீர்பெற்று வாழ்வதற்கு இப்பொங்கல் உதவிடட்டும் ...
image-19633

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

தமிழ்ப்பொங்கல் - ப.கண்ணன்சேகர் மண்ணில் பசுமை நிலவிட மணக்கும் தமிழால் குலவிட மாநிலம் மாறிட நல்லது! நல்லது நினைத்து வேண்டிட நாளைய உலகை தூண்டிட நன்மை செய்வாய் இக்கணம்! இக்கணம் எழுதும் வரிகளே இயம்பும் வாழ்வின் நெறிகளாய் இனிமைக் காணச் செய்திடும்! செய்திடும் ஒற்றுமை நட்பாக சேர்ந்தே வாழ்வீர் வளமாக செழித்தே ஓங்கும் வையகம்! வையகம் முழுமை தமிழாக வைத்திடு தாய்மொழி அமுதாக வந்திடும் தமிழ்தைப் பொங்கல்! பொங்கல் இல்லா நல்மனமே புழுங்கல் இல்லா ஒருகுணமே போற்றும் தமிழர் பன்பாடு! பன்பாடு காக்கும் ...
image-19630

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்வைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிசேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையா காணும்பொங்கல் ! தெருவெல்லாம் அன்பென்னும் தோரணங்கள் கட்டிவைப்போம் கரும்புசுவை மனமேற்றிக் கனிவுததைக் தூவிடுவோம் அரும்மஞ்சள் முகமொளிர அணைத்தொன்றாய்க் கூடிடுவோம் உருவாகும் சமுத்துவத்தில் உயர்பொங்கல் பொங்கிடுவோம் !
image-19627

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

பொங்கலோ பொங்கல்! - தமிழ நம்பி இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே எழுந்தே வாநீ! கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில் கட்டி வைக்கும் சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள் தூய பால்தான் எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை எடுத்துள் ஊற்று! ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை இடுபா னைக்குள்! மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும் மதுக்கு டித்தே கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே குரைநா யாக வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ பொங்கல்’ என்றே!  - தமிழ நம்பி  
image-19624

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! - பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும் ...