image-19670

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா

  வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் 'பண்டைய தமிழரின் நில மேலாண்மை' என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி  ஆனந்தஇராசன்
image-19728

கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்

தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்
image-19665

சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!

சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து ...
image-19721

வித்தகர் விக்கிரமனை வணங்கிடுவோம்! – தமிழ்த்தேனீ

(விக்கிரமன்( தமிழேஅடித்தளமாய் எழுத்தேவேள்வியாய், அமுதசுரபியாய், கலைமகளாய், தான் வணங்கத் தமிழ்த்தாயே மகிழும் வண்ணம் தன் எண்ணம் திண்ணமாய்க் கருத்தில் கொண்டே எண்பதிலும் எழுதுகிறார் இளமையாய்க் கலைகள் கொண்டு ஏணியாய்த் தானிருந்து எழுத்தாளர் பலர் தமையே ஏற்றிவிட்டார் எழுத்தால் வாழுகின்ற எண்ணற்ற நலிந்தோர்க்கு இப்போதும் உதவுகின்றார் எட்டாத புகழில்லை, விருதுமில்லை என்றாலும் அயராத ஆர்வமென்னும் நெய் ஊற்றி எழுத்தென்னும் விளக்கேற்றி மகிழ்கின்றார் எண்ணுகின்ற அற்புதங்கள் கைவசமாய்த் தான் கொண்டு கையெழுத்தாய் வடிக்கின்ற வித்தகராம் திருவிக்ரமன் இயலிசை நாடகமாம் முத்தமிழும் ...
image-19700

முனைவர் இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது

    அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது அளித்த நிகழ்வு தை 03, 2047 / சனவரி 17,  2016 அன்று மாலை திருவரங்கம் சிறீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.    விடுதலைவாசகர்வட்டம் மானமிகு மீனாட்சிசுந்தரம் வழக்கறிஞர் அரிகரன் முதலான நண்பர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இருநூறுபேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திக, திமுக, மதிமுக, காங்கிரசு, ...
image-18900

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 ) நிற்றலும் அவர்கள் நிலையை உணர்ந்து                 கெஞ்சினர் பின்னர் கிளந்தனர் பணிமொழி சேவகர் நிலையில் சிறிதும் மாறிலர் “பணமெனிற் பிணமும் பல்லைக் காட்டும்” என்பதை யுணர்ந்த இவ்வணி கருடன், ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வோ ராயிரம் பொற்கா சுகளைப் பொழிவதாய்க் கூறினர் பொற்கா சுகளோ போற்றப் படுவன ஆயிரம் என்றால் யார்மனந் திரியா? ஒன்றின் மேற் காசை என்றுங் காணாச் சேவகர் மயங்குதல் ...
image-18978

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: தொடர்ச்சி) 16 மாணவர் ஆற்றுப்படையும் மற்றைய ஆற்றுப்படைகளும்   பத்துப்பட்டுள் கூறப்பெற்ற ஆற்றுப்படை நூல்கள் ஐந்தனுள் திருமுருகாற்றுப்படை மட்டும் சிறிது வேறுபட்ட தன்மையுடையது எனலாம். இறையருள் பெற்ற புலவன் ஒருவன், இறையருள் பெறச் செல்லும் புலவன் ஒருவனுக்கு, இறைவன் உறையும் இடங்கள், இறைவனைக் காணச் செல்லும் வழிகள், அடியவனை நோக்கி ...
image-19568

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 07 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 06 தொடர்ச்சி) 07 கல்வியைத் தேடு!     உடல்நலத்துடன் கூடிய வலிமை எதற்குத் தேவை? அயலவரை அழிக்கவா? அல்ல அல்ல! நம்மைக் காத்துப் பயன்பாட்டுடன் திகழ! இதற்கு அடிப்படை கல்வி கற்றலும் கற்றபடி நிற்றலும். கல்வித்தேவையையும் கல்விக்கண்களை அனைவரும் பெறவேண்டும் என்பதையும் பாரதியார் பல பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். திறமை கொண்ட தீமையற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் ...
image-19724

தமிழ்வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்! – வாணிதாசன்

செய்யும் விளைந்தது; தையும் பிறந்தது; செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! - புதுச் செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்! பொய்கை புதர்ச்செடி பூக்கள் நிறைந்தன; பொன்னொளி எங்கணுங் கண்டோம்! - புதுப் பொன்னொளி எங்கணுங் கண்டோம்! மாவும் சுளைப்பலா வாழையும்   செந்நெலும் வந்து குவிந்தன வீட்டில்! - தை வந்தது வந்தது நாட்டில்! கூவும் குயிலினம் கூவாக் குயிலினம் தாவிப் பறந்தது மேல்வான்! - ஒளி தாவிப் பறந்தது கீழ்வான்! சிட்டுச் சிறுவரின் செங்கைக் கரும்புகள் தொட்டுப் பிசைந்தன பொங்கல்! - அதை இட்டு மகிழ்ந்தனர் ...
image-19697

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016

  அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம் தனித்தமிழ்ப் பெருநாளாம்! என்றும் பொங்கி ...
image-19613

செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே! – நாக.இளங்கோவன்

      போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள் குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக, ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு, பழமரமும் தன்கனியை தான்பிழிய, தேனோடு தீங்கனிச்சாறும் ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே கட்டி தரும் கரும்பு வயலுக்கு வாய்க்காலாய் ஓடிவிழ, கருப்ப வயலின் அண்டையிலே, தடஞ்சாலி நெல்லெங்கும் தளதளவென வளர்ந்திருக்க, அதைத்தடுக்கும் களையதனைக் களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின் கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக் களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம் ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச் சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில் மயங்கிய செஞ்சாலிநெல்லும் ...
image-19647

வான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்! – உருத்திரா

  உழவன் என்றொரு உயர்ந்ததோர் தமிழன் கிழக்கில் உதித்த கதிரையும் ஒளி பாய்ச்சி நாற்று நட்டு வழி காட்டி நன்று வைத்தான். விசும்பின் துளி கண்டு பசும்பயிர் வளங்கள் கண்டான். இஞ்சியும் மஞ்சளும் கரும்பும் சங்கத்தமிழ்ச் சுவைகள் ஆகி தமிழ்ப் புத்தாண்டு  மலரும் இன்று. பொங்கல் பொலிக! பொங்கலோ பொங்கல்! வள்ளுவனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் இனிய தமிழ் புத்தாண்டு இன்று. எல்லோருக்கும் என் இதயம் கனிந்த‌ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்! உருத்திரா