தமிழை நினைந்து தம்மை மறந்தவர்
இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று ...