(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
03. துறவற இயல்
அதிகாரம் 037. அவா அறுத்தல்
பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,
முழுமை யாகவே அறுத்எறிதல்.
அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.
தொடரும் பேராசைதான், எல்லா
உயிர்களின் பிறப்புகட்கும் விதை.
வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,
வேண்டாமை வேண்ட வரும்.
விரும்பின், பிறவாமையை விரும்பு; ...