image-8787

பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்

பாடி மகிழ்வோம் பைந்தமிழில்    உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே ...
image-8820

இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்லும் வெற்றிலை உரல்கள்     தேவதானப்பட்டிப் பகுதியில் வெற்றிலை பாக்கு இடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உரல்கள் பழைய இரும்புக்கடைகளுக்கு வழியனுப்பப்பட்டு வருகின்றன.   தேவதானப்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் வெற்றிலை, புகையிலை பயன்படுத்துபவர்கள் மிகுதியாக இருந்தனர். இதில் வயதானவர்கள் பல் இல்லாமல் இருந்தால் உரல் மற்றும் எச்சில் துப்புவதற்காகப் படிக்கம் என்ற ...
image-8798

தேனியில் சாக்கடைநீர்க் கலப்பால் தொற்றுநோய்

(கழிப்பறைஅருகே-குடிநீர்க்குழாய்) தேனி மாவட்டத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் பேரிடர் தேனிமாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில்வார்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீரைச் சேமித்து ஒவ்வொரு பகுதியாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கும்பொழுது பல ...
image-8783

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! – தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

  பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன் காட்சி - 1   அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     கூரையிலுள்ள குருவிக்கூடு நிலைமை  :     (தன்னுரையாக இரு சிட்டும் முன்னுரை இங்கே பகிர்கின்றது) ஆண் பெண் பருவ இருசிட்டு ஆழ்ந்த காதல் முடிபோட்டு வாழத்துடியாய்த் துடித்தொன்றாய் நாடி நரம்பு தளர்ந்து விட வானில் பறவைகள் பறந்ததுவே! அஞ்சிச் சிறகுகள் வழிதடுத்தும் கெஞ்சிக்கால்கள் குரல்கொடுத்தும் அலையாய், அலையாய் அலைந்துமே நிலையாய் ...
image-8791

வைகை அணையில் குளிக்கும் பயணிகள்

(வைகைஅணையில்குளியல்) வைகை அணையில் கண்டமான (ஆபத்தான) இடத்தில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணை மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். இப்போது பெய்து வருகின்ற மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வைகை அணையில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று தாவரங்களும் பூங்காக்களும் உள்ளன. இவற்றைக் காண்பதற்குத் தேனி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் ...
image-8812

இதழியலாளர் பாரதி – ஆவணப்படம் திரையிடல்

இதழியலாளர் பாரதி  ஆவணப்படம் திரையிடல் 27 நிமிடம் ( இயக்கம் - அம்சன் குமார் )பங்கேற்பாளர்கள் ..                  இதழாளர் மாலன்                                                        ...
image-8777

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  கண்ணதாசன் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது திரைப்பாடல்கள்தாம். நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளின் பொழுது நம்மோடு தொடர்புடையனவாக - நமக்கே என்று எழுதப்பட்டனவாக - அமைந்த பாடல்கள் வழி நாம் அவரை என்றும் நினைவில் கொள்கிறோம். ஆனால் அவர் பாடலாசிரியராக மாறும் முன்னரும் பின்னருமே கவிஞர், கதையாசிரியர், நாடக ஆசிரியர். இதழாசிரியர், திரைப்படக் ...
image-8773

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம்

(நவம்பர் 23, 2014 இன் தொடர்ச்சி) மையக்கருத்துரை   4. தொல்காப்பியர் நோக்கு    தொல்காப்பியரே சுற்றுச்சூழல் திறனாய்வுக்கு முன்னோடி எனலாம். அது இரண்டு நிலையில் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.1. பலரும் எடுத்துக் காட்டும் முதல்,கரு, உரி என்ற பாகுபாடு, 2. அவருடைய உள்ளுறை, இறைச்சி என்ற கருத்தமைவுகள் மூலம் புலனாகும் சுற்றுச் சூழல் திறனாய்வு கருத்துகள். 4.1.முதல், கரு, உரி          ‘முதல் ...
image-8729

தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்

 விண்ணில் மிதக்கும் விண்முகில்போல் விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்  கண்ணின் பார்வை தொலைநோக்கக்   காணும்  உலகம் விரிந்தோடத்  தண்ணீர்  மீதின் காட்சிகள்போல்  தளிர்ந்து  மனத்தில்சஞ்சரிக்க  என்னுள்  வாழ்ந்து எழுச்சியுறும்  இறந்த  கால நினைவுகளே ! பள்ளிப்  பருவ நாளங்கே ! பாடித்  திரியும் நண்பரங்கே ! சொல்ல இயலாச் சிரிப்பங்கே ! துயரம்  தாளா மனதங்கே ! செல்லம் கொடுக்கத்  தாயங்கே ! சிந்தை ஊக்கும் தந்தையங்கே !  உள்ளம் என்னும் உலகினிலே உலவித் திரியும் நினைவுகளே ! இன்ப துன்ப நினைவெல்லாம்  இறந்த  காலமனச்சின்னம் !  இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  எளிதாய்  முடிக்கவழிக்காட்டி !  என்றும் ...
image-8766

அன்னை மண்ணே! – செந்தமிழினி பிரபாகரன்

நீயே என்  தாயே..!! ஈரைந்து திங்களே.. தாயெம்மைச் சுமந்தாள்... மூவைந்து ஆண்டுகள் என்னைச் சுமந்த அன்னை மண்ணே.. என்னைத் தொலைத்தாயோடி? வெயிலோடும் வரப்போடும் விளையாட மடி தந்த அழகிய தாயவளை நெக்குருகும் நினைவுகளில் நானின்று சுமக்கின்றேன்.. நானென்ன உன் தாயா? பொழுதெல்லாம் பொங்கும் உணர்வு ஊற்றுகளில் உருக்குலைந்து போகாமல்.. போற்றியிங்கு பாடுகின்றேன்.. சுழன்று வீசிய காலச் சுழலில் அகதியென உலக மூலைகளில் திக்கொன்றாய்.. தூக்கி வீசப்பட்ட தூசுகளாக நாம்... காலச் சதியில் சிதறிய முத்துகளாய்.. உறவுகள் நாம் பிரிந்தோம்.. எங்கெங்கோ தொலைந்தோம்.. முகமிழந்து போன என் சந்ததிகள்.. உலகச் சந்திகளில் திக்கொழிந்து திசை மறந்து உறவிழந்து போனாலும்.. உணர்விழந்து போனதில்லையடி... உன் முகம் மறந்து போகவில்லை... விரட்டிய பகைக்கஞ்சி தூர தேசம் ஓடி வந்த என்னைத் தொலைத்த என் அன்னை மண்ணே.. .. தொலைந்து போகும் எம் காலங்களில் தொலையாத நினைவுகளுள் நீயே நிமிர்ந்து நிற்கின்றாய்... தொலை தூரம் சென்றாலும்.. தொலைந்து போகா சிந்தனைகளைச் சேர்த்தெடுத்து பொழுதெல்லாம் நினைப்பு உருக்கி விடுதலைக்காய் மூச்செறிக்க நீயே என்னை இயக்குகின்றாய்... உணர்வள்ளி வார்க்க வைக்கும் வல்லமை தருபவளாய் நீயே என் தாயே..!! நீயிருக்கும் திசை முகமே என் நினைப்புகளும் முகம் பார்க்கும்.. புழுதி மண் புரண்டு மண்வாசம் காணும் நாள்.. என் இறுதித் துளி வாழ்விலேனும் வரமாகி வருமா? வராமலே போகுமா? அறியேன்.. ஏக்கங்களை எமக்குத் தந்து தூக்கங்களைப் பறிக்கின்றாய்... துக்கத்தைத் தந்து ஊக்கத்தை உந்துகின்றாய்.. பச்சை வயல் பரப்பி.. பசுமையில் தாலாட்டிய தாய் மண்ணே.. இச்சையோடு அழைக்கின்றேன்.. கனவிலேனும் மடி தாடி.. என்றுனை மீண்டும்.. காண்பேன்.. ?? முத்தமிட்டு முத்தமிட்டு முப்பொழுதும்... மகிழ்ந்து குலவி மூச்சின் ...
image-8758

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன்

தூததும் நினைவே அன்றோ ! - திருமதி சிமோன்     காலமோ மாறி ஓடும்   கற்பனை, சுவையும் மாறும் ! ஞாலமோ சுமையை வாழ்வில்   நாளுமே ஏற்றி வைக்கும் ! பாலமாய் நின்று தாங்கும்   பாசமும் மறைந்து போகும் ! தூலகம் (விடம்) நிறைந்த போதில்   தூததும் நினைவே அன்றோ !  எண்ணும் பொழுதில் விளையாடும்   இளையோர் நினைவும் அதிலன்றோ ! வண்ணம் மின்னும் காதலதும்   வாழ்வில் மாந்தர் நினைவன்றோ ! திண்ணம் முதியோா் கனவெல்லாம்   தேடும் வம்ச வளமன்றோ ! சுண்ணம் (தூசு) போன்று ...
image-8727

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். - முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ...