image-7768

தேவதானப்பட்டிப் பகுதியில் மின்னியக்கி மூலம் தண்ணீர்த் திருட்டு

தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி, அ.வாடிப்பட்டி பகுதிகளில் மின்னியக்கி மூலம் தண்ணீர் திருடப்படுவதால் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் நிலை தடுக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அருகே உள்ள வைகை அணைப்பகுதியில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் மூலம் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டப்பகுதிகளில் வேளாண் பணிகள் ...
image-7721

தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவர்கள் தங்கள் வேளாண் பணியை விட்டுவிட்டுத் தொழில்நகரங்களை நாடிச்சென்றனர். ஒரு சிலர் கூலி வேலைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். தற்பொழுது மஞ்சளாறு அணை, வைகை அணை ...
image-7714

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி பகுதிகளில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் தாலநெய்(பாமாயில்) வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் இடர்ப்படுகின்றனர். தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் 22 ஆம்நாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பலகாரம் செய்யும் பணியை வீடுகளில் தொடங்கி விட்டனர். மேலும் ...
image-7760

தீர்வல்ல தற்கொலை!

தற்கொலை தீர்வாகுமா ?   அண்மைக் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அஃதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் ...
image-7744

விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு

தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வரி இழப்பு-மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தேனிப் பகுதியில் தனியார் விளம்பர நிறுவனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, செயமங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகைஅணை, மேல்மங்கலம் பகுதிகளில் தனியார் விளம்பர நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், திண்காரை(சிமிண்ட்டு) நிறுவனங்கள், தனியார் துணிக்கடைகள், தனியார் நகைக்கடைகள் ஆகியவை ...
image-7684

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு

தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.   தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது.   கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து ...
image-7741

குறுங்காலப் பயிருக்கு மாறும் தேனி

      தேவதானப்பட்டி பகுதியில் பருவமழை ஏமாற்றிவருவதால் குறுகிய காலப்பயிர்த் தொழிலுக்கு உழவர்கள் மாறத் தொடங்கிவிட்டனர்.   தேவதானப்பட்டி பகுதியில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, வாழை, நெல் போன்றவை நடப்பட்டு வேளாண்மை நடைபெற்று வந்தது. இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் பசுமை விரித்தாற்போல நெல்வயல்களும், வாழை மற்றும் கரும்பு விவசாயமும் நடைபெற்று வந்தது. இதனால் இப்பகுதியில் விளையும் பொருட்கள் தமிழகத்திற்கும் ...
image-7694

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் – நூலாடல்

  'தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்'  நூல் குறித்த உரையாடல்   சிறப்பு விருந்தினர்கள் ================= அபிலாசு இலக்சுமி சரவணகுமார் காவேரி ================ நூலாசிரியர் தாமிரா   நாள்: ஞாயிறு தேதி: ஐப்பசி 2, 2045 / 19-10-2014 நேரம்: மாலை 5:30 - இரவு 8:00   இடம் ===== பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041. தொலைபேசி: 4310 0442, 9382853646 http://www.panuval.com | buybooks@panuval.com https://www.facebook.com/events/650033921781467
image-7727

புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) ...
image-7756

சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.

சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது. - இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல <www.akaramuthala.in> மின்னிதழ், thiru2050@gmail.com   சங்க இலக்கியங்கள் இனிமைச் சிறப்பும்சாதி, சமய, இன வேறுபாடற்ற பொதுமைச்சிறப்பும் இன்றைக்கும் பொருந்தும் புதுமைச் சிறப்பும் மிக்கன. இவை குறித்து, 'வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை; பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை; அவை அகத்திணை, புறத்திணை என ...
image-7736

செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது செல்வாக்கை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியன முதன்மையைக் குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேசுவரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது ...
image-7705

பண்பிலார் அடிபணிகிறதே இவ்வுலகம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

    பண்புடையோரைப் போற்றுவதன் மூலம் பண்பாளர் பெருகுவர். பண்பிலாரை ஒதுக்குவதன் மூலம் பண்பிலார் குறைவர். பண்புளாருடன் பழகப் பழக நம்மிடமும் நற்பண்புகள் பெருகும். பண்பிலார் பழக்கம் தீங்கினைத் தரும். இவையே பழந்தமிழர் பண்புநலனாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் தீயராய் இருப்பினும் அவருடன் இழைவர். நற்பண்பாளர் குன்றிய செல்வமும் ...