image-14809

பல்துறையறிஞர் நச்சினார்க்கினியர் – மு.வை.அரவிந்தன்

நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், ...
image-14791

ஆரியர் வருகையால் கட்டுக்கதைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் பெருகின! – இராகவன்

  ஆரியர் வருகையால் பாரத நாட்டில் சமயச்சடங்குகள் வளர்ந்தன. தெய்வங்கள் பெருகின. புரோகிதம் வளர்ந்தது. சாத்திரங்களும், சடங்குகளும் மலிந்தன. அதனால் கலைகளும் கட்டுக்கதைகளும் வளர்ந்தன. குருட்டுப் பழக்கவழக்கங்களும், மூடநம்பிக்கைகளும், சாதிகளும், சாதிக் கட்டுப்பாடுகளும் பயனற்ற மந்திர தந்திரங்களும் பெருகின. தெய்வங்களும் அவற்றின் மனைவி மக்களும், சிறு தெய்வங்களும் பெரிய தெய்வங்களும் அவற்றின் பணியாட்களுமாக ஆயிரம் ஆயிரமாகத் ...
image-14806

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் – மு.வை.அரவிந்தன்

நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர்   இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன் - அருள்பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. ...
image-14743

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள்! காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! நங்கை ஒருத்தி தன்மனத்துள் நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே தங்கும் அன்புக் கணவனெனத் தாங்கிய பின்னை மாற்றுவளோ? அங்கம் குழைந்தே அழதழுதே ஆண்டவன் அடிசேர் அடியார்கள் பங்கம் நேரத் தம்மனத்தைப் பாரில் என்றும் மாற்றுவரோ? அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள்! பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் ...
image-14802

மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே – கி.வா.சகநாதன்

மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே!   இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமையவேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சூத்திர வடிவில் அமைந்திருப்பதால் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து இலக்கண அமைதி தெரிந்து ...
image-14788

முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர்

முற்காலத் தமிழர்கள், ஆயிரக்கணக்கான கல்தொலைவில் கடல் வணிகம் மேற்கொண்டிருந்தனர் -  நுண்கலைச் செல்வர் இராகவன் நுண்ணறிவும், திறனும், உறுதியான உள்ளமும் வாய்ந்த முற்காலத் தமிழர்கள் கலங்கள் கட்டி ஆயிரக்கணக்கான கல்தொலைவிற்கு அப்பாலுள்ள தீவுகளுக்கெல்லாம் போந்து தம் வணிகப்பண்டங்களை அங்கு விற்று அஃதாவது பண்டமாற்றுச் செய்து வந்தனர். ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகப் புகழ்ந்து கூறப்பெறும் மணி மேகலையில் ...
image-14764

சிறுதானிய உணவுத்திருவிழா, சேலம்

ஆடி 10. 2046 முதல் ஆடி 24, 2046 வரை   சூலை 29, 2015 முதல் ஆக.09, 2015 வரை சேலம் அத்தம்பட்டிச் சுழற்சங்கம், சேலம் ஐந்திணை உணவகம் கண்காட்சி கருத்தரங்கம்
image-14778

சங்க இலக்கியப் பயிலரங்கு,

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி  எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை   ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து,  நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப ...
image-14750

இந்நாடு முழுதும் பரவியிருந்தோர் தமிழரே ! – மறைமலையடிகள்

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு) -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35  
image-14761

சமசுகிருதமயமாக்குதலால் அடையாளம் இழந்தனர் – தமிழண்ணல்

  தமிழர்களுக்குச் சிறந்த வானநூற் புலமை இருந்தது. அதனால் கணியம் என்னும் சோதிடக் கலையிலும் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இன்று திருமணம் முதல் நீத்தார் கடன் ஈறாகத் தமிழர்தம் சடங்குகள் பலவும் தொன்றுதொட்டு இங்கு நடைபெற்று வந்தனவேயாம். எதையும் ‘சமசுகிருதமயமாக்கல்’ எனும் ஒரு சூழல், ஒரு பேரியக்கமாகவே சில நூற்றாண்டுகள் நடைபெற்றுள. இன்றைய ஆங்கில மோகம் ...
image-14717

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2   இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் ...
image-14773

சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை

ஆடி 31, 2046 /  ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 - நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து  250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி ...