(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி)
001 அறத்துப் பால்
01 பாயிர இயல்
002. வான்சிறப்பு
உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம்
மழையின், பயன்களும் சிறப்புக்களும்.
வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான்,
தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று.
உலகையே நிலைக்கச் செய்வதால்,
மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க.
துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத்,
துப்(பு)ஆய தூஉம், மழை.
உண்பார்க்கு உணவை ஆக்குவதும்,
உணவாக ஆவதும் மழைதான்.
விண்நின்று பொய்ப்பின், விரிநீர் ...