01. அறத்துப் பால்
001. அதிகாரம்
01. பாயிர இயல்
001. இறைமை வழிபாடு
மக்கள் கடைப்பிடிக்கத் தக்க
இறைமை ஆகிய நிறைபண்புகள்.
அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி
பகவன், முற்றே உலகு.
எழுத்துக்களுக்கு, அகரம் முதல்;
உலகினுக்கு, இறைவன் முதல்.
கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன்
நல்தாள், தொழாஅர் எனின்.
தூய அறிவன்வழியைப் பின்பற்றாத
சீரிய கல்வியால், பயன்என்….?
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.
மலரைவிட, மெல்லிய ...