சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் தமிழிசைபற்றி அறிவித்துள்ள கருத்துகள் அளவில் இன்றைய அறிவுக்கும் மிஞ்சியதாக அமைந்திருப்பதைக் கண்டு தமிழிசையின் வாழ்வையும் வளர்ச்சியையும் கருதிக் காணலாம். இவற்றுள் விளக்கப் பெற்றுள்ள கருத்துகள் உலகில் வேறு எந்த நாட்டிசைக்கும் அமைத்துக் காணப்படாதவை. ஓசையின் அளவு, இசையமைப்பு, பண்ணமைப்பு, பாடலமைப்பு, தாளவகை, தூக்கு, பிண்டி, பிணையல், ...