image-12380

மொழித் தூய்மை உலகோர் வேண்டுவது

  'தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்'' என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் ...
image-12378

பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே!

  உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.   தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் ...
image-12376

உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்

  ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார்.   எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் ...
image-12374

தமிழர்க்குரியனவற்றை ஆரியர் தமக்குரியன என்றனர்

 இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருத்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின ...
image-12345

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான ...
image-12352

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு - 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3)   ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் ...
image-12372

கலைச்சொல் தெளிவோம்! 162. வெகுள்பு வெருளி-Angrophobia; 163. வெள்ள வெருளி-Antlophobia

கலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia  வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி-Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia   சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள ...
image-12368

கலைச்சொல் தெளிவோம்! 160. விலங்கு வெருளி-Zoophobia; 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia

கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia  விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ...
image-12363

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia; 158.வம்பலர் வெருளி-Katikomindicaphobia;159. வானிலை வெருளி-Astraphobia

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia மெலி(1), மெலிக்கும்(2), மெலிகோல்(1), மெலிந்த(2), மெலிந்தார்(1), மெலிந்திட்ட(1), மெலிந்திலள் (1), மெலிந்து(9), மெலிய(3), மெலியர்(2), மெலியா(2), மெலியாது(1), மெலியும்(1), மெலிவு(5) என மெலிவு தொடர்பான சொற்கள் சங்கப் பாடல்களில் வருகின்றன. மெலிவு பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia   கலைச்சொல் தெளிவோம்! 158. வம்பலர் வெருளி-Katikomindicaphobia  வம்பலன்(1), வம்பலர்(33), வம்ப மாக்கள், வம்ப ...