image-10301

கலைச்சொல் தெளிவோம்! 67. மேலிழை/மெல்லிழை-lamination : இலக்குவனார் திருவள்ளுவன்

  67. மேலிழை/மெல்லிழை-lamination   அட்டை அல்லது ஒரு பரப்பின் மேல்மேற்பரப்பு தெரியும்படியும் காப்பாகவும் இடப்படும் இழையை (இ)லேமினசேன் lamination என்று குறிப்பிடுகின்றனர். இதனை மென்படல உறை(ஆட்.), அடுக்காக்கம்(பொறி.), மெல்லடுக்கு(பொறி.,புவி.) மென்தகடு, அடுக்கு அமைப்பு (மனை.) என வெவ்வேறு வகையாகக் குறிக்கின்றனர். மேல்(89)+இழை(256)>மேலிழை எனலாம். மென்(232), மென்பால்(2), மென்புல(7), மென்புலம்(1), மென்மெல(15), மென்மை(5), மென்மொழி(1) என மென்மை பற்றிய ...
image-10342

ஐரோப்பாவின் தங்கத்தமிழ்க்குரல் போட்டிகள்

பார்வையும் செயற்பாடும் ஐரோப்பியத் தங்கத் தமிழ்க்குரலுக்கான பாடல் போட்டி நிகழ்ச்சியை லிபாராவின் ஆதரவுடன்  பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவன(ஐ.பி.சி.)த் தொலைக்காட்சி வழங்க இருக்கின்றது. நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதோடு வெற்றியாளர்களுக்கு மாபெரும்  மதிப்புடன் பெரும் தொகையான பரிசுகளையும் வழங்க இருக்கின்றது ப.ஒ.நி.(ஐ.பி.சி.) தொலைக்காட்சி. இந்தப் போட்டியின் மூலம் சிறந்த ஐரோப்பிய தமிழ்ப் பாடகர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளது  ...
image-10299

கலைச்சொல் தெளிவோம்! 66. விசைப்பி-switch : இலக்குவனார் திருவள்ளுவன்

  66. விசைப்பி-switch விசை(35), விசைத்த(1), விசைத்து(6), விசைப்ப(1), விசைப்பு (ள) என விசை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. விசைத்திறன் பெற இணைப்பாக இருந்து இயக்குவதை விசைப்பி எனலாம். சுவிட்ச்(சு)/switch-(ஆட்.) பொருத்தி, இணைப்பி, திறப்பான், நிலைமாற்றி (வேதி.) இணைப்பி. (பொறி.) இணைப்பி, பாதைமாற்றி (மனை.), இணைப்புமாற்றி, நிலைமாற்றி, (தக.) நிலைமாற்றி என இப்பொழுது வெவ்வேறு வகையாகக் ...
image-10297

கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்

65.முடுக்கி-accelerator    ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர். இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன் அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம். முடுக்கி-accelerator – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். - பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. - சொற் பிறப்பியல் ...

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்

கொச்சைத்தமிழின் வெவ்வேறு வடிவங்களே பிற மொழிகள்   கொச்சைத் தமிழாகப் பிறந்த மொழிகளில் மிகப் பழமையானவை சுமேரிய, எகிப்து, மொழிகளாகும். பின்னர் வடமொழி, கிரேக்கம், இலத்தீன் என்று சிறப்பான வளம் பெற்ற மொழிகள் தோன்றின. கிரேக்கம், இலத்தீன், வடமொழியாவும் கொச்சைத் தமிழ் என்பதால் அவை மக்கள் வழக்கில் நிற்காமல் மறைந்தன. கொச்சைத் தமிழிலும் மீண்டும் எழுத்து மொழி, ...

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை

தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை   மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி

பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி   இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. - மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.   திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் ...
image-10258

கடவுளும் ஆய்ந்த உயர்மொழி தமிழ்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா யெண்ணவும் படுமோ? – பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57