(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி)
18. பழிதீர்மாண் நலம் தருகுவர் - தோழி
– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியை நோக்கித் தோழி கூறுகின்றாள்:
மழைக்காலத்தில் பூக்கும் பிச்சிப் பூப்போன்ற கண்களையும் மணம் வீசும் கூந்தலையுமுடைய நல்லாய்! தலைவர் வேற்றுநாடுதான் சென்றுள்ளார். வீரக்கழலை அணிந்துள்ள ...