பூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம்
புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம்
புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில்
புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை
நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர்
நயத்தகு மேடையில் நடன ஆட்டம்
தீத்திறம் இல்லா நம்மோர் செயலால்
திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள்
தலைமை தலைமை என்றே நம்மோர்
தலைவர் என்றே அனைவரும் உள்ளார்
தலைமை காக்கும் தலைமை இல்லை
தவநெறி போற்றும் தொண்டர் இல்லை
அவனிவன் எனறே குறையாய் மொழிவான்
அவனியே ...