திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ...