மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 25
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 10 தொடர்ச்சி ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். ‘புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?’…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 24
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 10 உடல்குழைய என்பெலாம் நெக்குருகவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்றஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவேஓர் உறவும் உன்னியுன்னிப்படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற… — தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. உரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 23
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 தொடர்ச்சி ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 9 “பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்புபூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்பூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்பார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி“ — சது.சு.யோகி அந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 8 தொடர்ச்சி “செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். “இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 8 “நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்பொன்னானாய் மணியானாய் போகமானாய்பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னைஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே“ – தேவாரம் “முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு…” என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 7 தொடர்ச்சி தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேசை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் ஏட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், ‘ஙொய்’ என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேசை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேசை விளக்கு அணையவில்லை. படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 7 பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம் — கம்பன் பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட ஏட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: “பூரணி! சாயங்காலம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 6 தொடர்ச்சி இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிருவாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 6 தொடர்ச்சி “தரளம் மிடைந்து – ஒளிதவழக் குடைந்து – இருபவளம் பதித்த இதழ்முகிலைப் பிடித்துச் சிறுநெளியைக் கடைந்து – இருசெவியில் திரிந்த குழல்அமுதம் கடைந்து – சுவைஅளவிற் கலந்து – மதன்நுகரப் படைத்த எழில்“ படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?”மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4.
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய், சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய தொடர்வண்டி…