ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்

ஆரியர் இந்தியா வந்தபின்பே தமிழரைப் பார்த்து எழுதினர்   ஆரியர் இந்தியாவிற் புகுந்த பின் தமிழர் உடைய நாகரிக அவர் தாங்கருதிய பொருளை எழுத்திலிட்டுப் பொறித்தலுங் கண்டு தாமும் தம்முடைய பாட்டுக்களைப் பண் அடைவுபட வகுத்தஞான்று எழுதுமுறை கண்டறிந்தார். இது  என்னும் பண்டிதர் விளக்குமாற்றானும் நன்கு அறியப்படும். – தமிழ்க் கடல் மறைமலையடிகள்  

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு  

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம்.   இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…