ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.)  2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக  வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்!    பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின்  பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை  அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்!…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.)  2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) உலகமனிதன் முதலில் உதித்ததுவும் உன்குடியா? நிலம் உன்னைப் புரிந்துகொள்ள  நிமிர்ந்துநிற்க மாட்டாயோ?”    தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார்!  கிடையாத நம் சொத்துத் தமிழ்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 1   தமிழ்மொழிக்குப் புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மாக்கவி பாரதியார், ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்’ என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தைப் பயன்படுத்தினார் பாரதியார்.  மாக்கவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். “தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட…

பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்   பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச்…